Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு முதலுதவி..(அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது)

சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முதலுதவி!.

சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு முதலுதவி: 

அடிபட்டவரால் பேச முடிகிறதா?சீராக சுவாசிக்கிறாரா?என்றும் நாடி துடிப்பையும் அறிய வேண்டும்.சுவாசம் இல்லை என்றால் அடிபட்டவரின் வாயை திறந்து சுவாசிப்பதற்கு ஏதாவது இடைஞ்சல் இருக்கிறதா என்று அறிய வேண்டும். ஏதாவது இடைஞ்சல் இருந்தால்,வாயினுள் ஆள்காட்டி விரலையோ அல்லது நடுவிரலையோ உள் செலுத்தி இடைஞ்சலை சரிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது, அடிபட்டவர் விரலை கடிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

நாடித் துடிப்பு குறைந்து, சுவாசம் குறைந்து காணப்பட்டால் வாய்க்கு வாய் சுவாசமும், வாய்க்கு, மூக்கு சுவாசம் கொடுக்க வேண்டும். வாயில் ரத்த கசிவு அல்லது வாந்தி எடுத்தால் அவருடைய உடம்பையும், தலையையும் ஒரு புறமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இதனால் புறை போவதை தவிர்க்கலாம். ஒரு புறமாக படுக்க வைக்கும் பொழுது கீழ் இருக்கும் கை நீட்டியும், மேல் உள்ள கை அவருடைய மார்பின் மேல் இருக்க வேண்டும்.

இரத்தக்கசிவு அதிகமாக இருந்தால் அந்த பாகத்தை அழுத்தி பிடிக்க வேண்டும். நம்முடைய உள்ளங்கையை வைத்தோ அல்லது கைவிரல்களை வைத்தோ அழுத்தி பிடிக்க வேண்டும். அடிபட்டவர் விழுந்திருக்கும் போது அவருடைய உடம்பின் நிலை மாறுபட்டு காணப்பட்டால் அவரை அசைக்க கூடாது. உடனடியாக மருத்துவரின் சிகிச்சைக்கு கொண்டு போக வேண்டும். இவ்வாறு இருக்கும் போது குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது. 

ஏனென்றால் புறை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும். நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை. நோயாளியை ஸ்ட்ரெட்சர் கொண்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

அவருடைய முதுகையும், கழுத்தையும் நேரடியாக வைக்க வேண்டும். நோயாளி நேராக படுத்திருக்க வேண்டும். கை அல்லது கால் ரத்த கசிவு இருந்தால், அப்பாகத்தை உயர்த்தி பிடித்து ரத்த கசிவை அழுத்தி பிடிக்க வேண்டும். அவர் தொடர்ந்து மூச்சு விடுகிறாரா? அவருடைய நாடி துடிப்பும் சீராக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top