Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



டிரைவிங் லைசென்ஸ் பெற வழிமுறைகள் என்ன.? (நண்பர்களுடன் பகிருங்கள்)

டிரைவிங் லைசென்ஸ் பெற வழிமுறைகள் என்ன.? (நண்பர்களுடன் பகிருங்கள்)

உங்களுக்குப் 16 வயது முடிந்திருந்தால், 50 சிசி-க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். 18 வயது முடிந்திருந்தால் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்,கார், போன்ற வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.....

தேவைப்படும் ஆவணங்கள் 1. 

1,முகவரி ஆதாரம் (உ-ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).

2. வயது ஆதாரம் (உ-ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).

3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் - 1 (இந்தப் படிவத்தில் 'அ’ இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப் பரிசோதித்து, 'நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்’ எனச் சான்றளிக்க வேண்டும்),

மற்றும் படிவம் - 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.). ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி கட்டணம் செலுத்தி பழகுநர் உரிமம் ((Learner’s Licence) ) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு ஓட்டுநர் உரிமம் ((Driving Licence)) பெற நேரில் ஆஜராக வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்? 

பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு, ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4-ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும் (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால், படிவம் 5 இணைக்க வேண்டும்).

இணைக்க வேண்டிய ஆவணங்கள்: 

1. பழகுநர் உரிமம், 2.

2,வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷூரன்ஸ்),

3.பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம், 4.

4,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.இவற்றுடன் உரிமம் வழங்கவும், தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

பரீட்சை நடைபெறும் முறை:

வாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில் அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக் காட்டினால், ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார்.

அதன் பின்னர்தான் உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார். சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top