Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஆண்களின் மூக்கு ஏன் பெரிதாக இருக்கு தெரியுமா..?

ஆண்களின் மூக்கு ஏன் பெரிதாக இருக்கு தெரியுமா..?

அதிகம் கோபப்படுவதால் இருக்கலாம்' என்று கிண்டலாகச் சொல்லாதீர்கள். உண்மையான காரணம், அதிக அளவு பிராண வாயு (ஆக்சிஜன்) தேவைப்படுவதாலேயே என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர், மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர். பொதுவாக பெண்களைவிட, ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஆய்வு நடந்துவந்தது. 

இந்த ஆய்வின் முடிவில் ஆண்களின் பெரிய மூக்குக்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருப்பதாவது: பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு, 10 சதவீத அளவு பெரியது. ஆண்களின் உடல் அமைப்பில் சதை அதிகம் உள்ளது. இதன் வளர்ச்சிப் பெருக்கத்துக்கு, அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பெண்களின் உடலில் சதையைவிட கொழுப்பு அதிகம் உள்ளது. 

ஆண்களை விட பெண்களுக்கு சதை குறைவு என்பதால் அவர்களுக்கு ஆண்களைக் காட்டிலும் குறைந்த அளவு ஆக்சிஜன் போதுமானது. அதிக அளவு ஆக்சிஜனை உள்ளிழுப்பதற்காகவே ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்துள்ளது.நமது முன்னோர்களுக்கு பெரிய அளவிலான மூக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினருக்கு சிறிதாக உள்ளது. நம் மூதாதையர்கள் பெரிய உடல் அமைப்பைப் பெற்றிருந்தனர். 

அவர்களின் உடல் வளர்ச்சிக்காக அவர்களுக்கு அதிக அளவு ஆக்சிஜனை உள்ளிழுக்கும் பெரிய மூக்கு தேவைப்பட்டது. ஆனால் நம் உடல் அளவு சிறிதாக இருப்பதால் தற்போது நம் மூக்கு சற்றுச் சிறிதாகவே உள்ளது. பொதுவாக பிறக்கும் குழந்தையின் மூக்கின் அளவில் பெரிய மாறுபாடுகள் இருக்காது. ஆண், பெண் குழந்தைகளுக்கு ஒரே அளவிலே மூக்கு காணப்படும். 11 வயதாகும் போதுதான் மூக்கின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top