அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த டேனா கோல்ம்ஸ் (32) என்ற பெண், கடந்தாண்டு மே மாதத்தில் கோல் சிட்டி, இலினோய்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த சட்ட குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கோல்ம்ஸ்சை நிர்வாணப்படுத்தி மூன்று அதிகாரிகள் சோதனையிட்டது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதனால் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகிய அவர் தனக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து நீதிமன்ற விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ரூ 2.14 கோடி தொகையை கோல்ம்சிற்கு நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது....!