Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


கஸ்டமர் கேருக்கு போன் செய்து எப்படி எல்லாம் கலாய்க்கிறாங்க பாருங்க!.

கஸ்டமர் கேருக்கு போன் செய்து எப்படி எல்லாம் கலாய்க்கிறாங்க பாருங்க!.

நேரங்கெட்ட நேரத்தில் நாங்கள் இந்த ஆஃபர் தர்றோம், அந்த ஆஃபர் தர்றோம் என கடுப்பேத்தும் கம்பெனிக் கால்களால் வெறுத்துப் போன இளைஞர் ஒருவர் கஸ்டமர் கேருக்கு போன் செய்து கலாய்க்கிறார் இப்படி.... 

பெண்: வணக்கம்.---- பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் கூறுங்கள்? 

இளைஞர்: என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறியா...? 

பெண்: (அதிர்ச்சியுடன்)சார்,நீங்கள் தவறான எண்ணுக்கு அழைத்து விட்டீர்கள் என எண்ணுகிறேன்.நம்பரை மறுமுறை சரி பார்த்து அழைக்கவும் நன்றி.

இளைஞர்: இல்லை, நான் சரியாகத் தான் அழைத்திருக்கிறேன்.சொல், என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா..? 

பெண்: மன்னித்துக் கொள்ளுக்கள் சார், எனக்கு உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை... ( வாடிக்கையாளரின் அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப் படும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையுடன் பேசுகிறார்) 

இளைஞர்: நல்லா யோசிச்சுச் சொல்லுங்க மேடம், காதல் திருமணம் செஞ்சுக்கிட்டீங்கனா சுவிட்சர்லாந்துக்கு ஹனிமூன் போகலாம், அரேஞ்ச் மேரேஜ்னா பாரீஸ் போகலாம்... 

பெண்: எனக்குத் தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவே விருப்பம் இல்லைனு சொல்லிட்டேனே அப்புறமும் ஏன் இதெல்லாம் சொல்றீங்க... 

இளைஞர்: சிம்பிளா வேணும்னா ரூ 20 ஆயிரம் செலவு பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம், கிராண்ட்டா வேணும்னா ரூ2 லட்சம் செலவாகும். பரவாயில்லையா....? 

பெண்: எனக்கு விருப்பம் இல்லைனு எத்தனைத் தடவைச் சொல்றது சார்...(சற்று கடுப்புடன் பேசுகிறார் அப்பெண்...) 

இளைஞர்: இப்போ புரியுதா..தேவையிலாம,தேவையில்லாதத பேசுனா எவ்ளோ கோபம் வரும்னு..கண்ட நேரத்துல கால் பண்ணி ‘அந்த ஆஃபர், இந்த ஆஃபர்'னு இனிமே யாராவது எனக்கு கால் பண்ணினா, உனக்குத் தான் நான் கால் பண்ணுவேன் புரியுதா...? 

பெண்: நல்லா புரிஞ்சது சார். உங்க நம்பர 'டூ நாட் டிஸ்டர்ப்' லிஸ்ட்ல போட்டுடறேன்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top