Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வியர்வை நாற்றத்தை போக்க இயற்கை வழிமுறை.?

வியர்வை நாற்றத்தை போக்க இயற்கை வழிமுறைகள்!.

குளிக்கும் முன் அரைமணி நேரத்திற்கு முன் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து நசுக்கி அதன் சாறை உடலெங்கும் நன்றாக தேய்த்து விட்டு அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வந்தால் உடல் நாற்றம் நாளடைவில் நீங்கும். 

ஜவ்வாது என்ற ஒரு பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதில் மிகவும் சிறிய அளவு எடுத்து நீர்வி்ட்டு குழைத்து தேகத்திலும் உள்ளே ஆடையிலும் தடவி விட்டால்  ஜவ்வாது வாசனையில் நாற்றம் தெரியாது. இது மிகப்பண்டைய நாற்றம் போக்கும் வாசனை முறை. 

மீன்கள் அல்லது இறச்சி வகைகளை வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால் அவ்வகை உணவுப்பொருட்களை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கலாம். மாதத்திற்கு ஒரு நாளாவது வெறும் பழங்களையும் நீர் ஆகாரத்தையும் மட்டும் உண்டு பழகவும். இதனால் உடல் உணவுப்பாதை சுத்தமாகும்.

உடலில் உண்ட உணவு செரிப்பதில் கோளாறு இருந்தாலும் வியர்வையில் நாற்றம் அதிகமாக இருக்கும். அடிக்கடி மலம் மற்றும் சிறுநீரை கழித்து உணவுப்பாதையை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். இதனால் வியர்வையின் அளவும் நாற்றமும் குறைய ஆரம்பிக்கும். 

வியர்வை மிக அதிகமாக இருந்தால் தினம் இருமுறை குளிப்பதை வழக்கமாக கொள்ளவும். பல ஊர்களில் வாரம் ஒருமுறை மட்டுமே தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. இது மிகவும் தவறு. நமது நாடு வெப்ப மண்டல மத்திய பகுதியில் இருப்பதால் தினமும் தலைக்கு குளிப்பது மிக நல்லது.

வியர்வை சுரப்பிக்கும் பாலுணர்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சிலருக்கு உடலுறவு கொண்ட நாட்களில் அல்லது தொடர்ந்த நாட்களில் வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும். அடிக்கடி நீண்ட நேரம் குளிந்த நீரில் குளித்து உடல் சூட்டை தணிக்க முயலவும். வீட்டில் குளிப்பதை விட ஆறு, கடல்,இவைகளில் குளிக்கும் போது சீக்கிரமாக சூடு தணிய ஆரம்பிக்கும். 

கடைசியாக நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஆளாக இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள். உணவுப்பழக்கத்தை சீர்படுத்தல், உடல் நோயை கண்டறிந்து தீர்க்க முயலுதல், உடலை எப்போதும் தூய்மையாகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க முயலுதல் இவற்றால் உடல் வியர்வையையும் அதனால் வரும் நாற்றத்தையும் தவிர்க்கலாம்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top