Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு மெஷின்!.

ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு மெஷின்!.

சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம்.அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இப்போது இதற்கு முக்தி தர ஒரு மெஷின் வந்து விட்டது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கான மெஷின் இது. ஏடிஎம் மெஷின்ம போல எனி டைம் ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. 

இந்த மெ்ஷினில் உள்ள ஒரு பட்டனைத் தட்டினால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய அது உதவுகிறதாம். இந்த ஆர்கஸம் மெஷினுக்கு அமெரிக்காவில் காப்புரிமை வேறு பெற்றுள்ளனர். இந்த மெஷினும் கூட ஒரு வகையான இம்பிளான்ட்தான்.. அதாவது செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல. இந்த ஆர்கஸம் மெஷினானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. 

இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும். இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி விடும். இந்த வேலையை அந்த மெஷினில் உள்ள எலக்ட்ரோடுகள் செய்கின்றன. இந்த மெஷின் இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் வேறு இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். 

அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக்னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும். அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டி விட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும். இந்த இம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்களாம்.

மேலும் சிக்னல் ஜெனரேட்டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத்துகிறார்கள். நமக்கு எப்போதெல்லாம் தேவைப் படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலையை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம். தற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top