Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தாம்பத்ய உறவுக்கு மனைவி மறுத்தால் விவாகரத்து செல்லாது செல்லாது.?

தாம்பத்ய உறவுக்கு மனைவி மறுத்தால் விவாகரத்து செல்லாது செல்லாது.?

தேன்நிலவின் போது மனைவி கணவனின் தாம்பத்திய உறவுக்கான அழைப்புக்கு இசையவில்லை என்பது மட்டுமே விவாகரத்துக்குக் காரணம் ஆக முடியாது என்று குடும்ப நல கோர்ட் கொடுத்த விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்து விவாகரத்து செல்லாது என்று மும்பை கோர்ட் ஒன்று பரப்பு தீர்ப்பளித்துள்ளது.

2009ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் நடந்தது. நாளடைவியில் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. மனைவி தனக்கு கொடுமை செய்கிறாள், இச்சைக்கு இசைய மறுக்கிறாள் என்றும் கடும் குற்றச்சாட்டுகளுடன் கணவன் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். குடும்பநல கோர்ட் விவாகரத்து கொடுத்துத் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து மனைவி தரப்பில் முமை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரணையில் கணவர் தரப்பில் வழக்கறிஞர் வாதம் புரிகையில் தேன்நிலவின் போது மணவாழ்க்கையின் நிறைவு செய்கிற விடத்தில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள மனைவியை கணவர் அழைத்ததாகவும் அவர் மறுத்து விட்டதாகவும் அந்த வகையில் மனைவியின் மறுப்பு தனக்கு செய்யப்பட்ட கொடுமை என்று கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

திருமணம் நடந்த பிறகே கணவனை திருப்தி செய்வது மனைவியின் கடமை என்று வாதிடப்பட்டது. மனைவி தரப்பு மேற்கூறிய குற்றசாட்டை மறுக்கவே, கணவர் தரப்பில் தன்னையும் தன் பெற்றோரையும் மதிக்கவில்லை, அடிக்கடி சண்டை போடுகிறார், மேலும் தன் விருப்பத்தை மீறி அலுவலகப்பணிக்காக நாசிக் சென்றார், மனைவி அவ்வப்போது பேண்ட் சட்டை அணிந்தார் என்றும் அடுக்கடுக்காக மனைவி மீது புகார் கூறப்பட்டது.

நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பில் கூறியிருப்பது: கணவர் தரப்பில் கூறப்பட்டது எதுவும் விவாகரத்திற்கான காரணங்கள் ஆக முடியாது. தேன்நிலவின் போது தாம்பத்திய உறவுக்கு மனைவி மறுப்பது விவாகரத்திற்கான காரணங்கள் ஆகாது. பேண்ட் சட்டை எப்போதாவது அணிவதெல்லாம் காரணமா?

திருமண வாழ்க்கை எனும்போது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பார்க்கவேண்டும்,ஒரு குற்த்த காலக்கட்டத்திற்குரிய சில சம்பவங்களை மட்டுமே வைத்து வாழ்க்கைத் துணை கொடுமை படுத்துவதாக எதிர்தரப்பு குற்றம்சாட்ட முடியாது. என்று கூறி குடும்பநல கோர்ட் விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்தது...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top