Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


மும்பையில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்.. அதிர்ச்சி வீடியோ!.

மும்பையில் திடீர்ரென இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம்..அதிர்ச்சி வீடியோ!.

மும்பையில் 7 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது மும்பையின் புறநகரில் உள்ள சாண்டா குரூஸ்-க்கு உட்பட்ட வகோலா பகுதியின் யஷ்வந்த் நகரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் வழக்கறிஞர் ஒருவரின் குடும்பம் மட்டும் வசித்து வந்துள்ளது. நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று சீட்டுக்கட்டு சரிவது போல, அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளதால் மீட்புப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழும் காட்சி அங்கு ஏதேச்சையாக நின்றவர்களின் செல்போன் கேமராவில் பதிவாகியுள்ளது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top