Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உங்கள் வாழ்க்கையை வெற்றி பாதையாக மாற்ற வேண்டுமா.?

உங்கள் வாழ்க்கையை வெற்றி பாதையாக மாற்ற வேண்டுமா.?

*அதிகமான தூக்கம், அலட்சியம், குரோதம், சோம்பேறித்தனம், பழிக்குபழி வாங்கும் உணர்வு போன்றவைகளை உங்களிடமிருந்து விலக்கிவிடுங்கள். மனதில் லட்சியத்தை உருவாக்குங்கள்.

*அறிவின் உறைவிடம், மூளையின் இடதுபாகமாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் வலது பக்க மூளையைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். வழக்கமாக வலது கையால் செய்யும் சில வேலைகளை, அடிக்கடி இடது கையால் செய்தால் மூளை மேலும் சிறப்பாக வேலை செய்யும்.

*மனதை ஒருநிலைப்படுத்துதல் தான் எல்லாவற்றிற்கும் முக்கியம். அதற்காக தியானம் செய்யுங்கள்.

7 கட்டங்களாக மனதை ஒருநிலைப்படுத்தும் முறை....

*ஒரு ஓவியத்தை அதிக நேரம் உற்றுப்பாருங்கள். அப்போது அந்த ஓவியத்தை தவிர வேறு எதுவும் உங்கள் மனதில் நிற்காது.

*தினமும் பார்க்கும், கேட்கும், அனுபவப்படும் விஷயங்களை எல்லாம் நினைவில் கொண்டுவர முயற்சியுங்கள். அதன் மூலம் மறதி நீங்கும். முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

*அன்றாடம் பத்திரிகையை படித்த பின்பு அந்த செய்தியையும், படத்தையும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து பதியுங்கள். அவைகளை சொல்லிப் பாருங்கள். 20 சதவீதத்திற்கு மேல், முதல் தடவை உங்களால் சொல்ல முடியாது. ஆனால் தொடர்ந்த முயற்சியால் நினைவாற்றலின் சதவீதம் அதிகரித்துக்கொண்டே போகும். மனதை ஒருநிலைப்படுத்துவது மூலம் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தில் 50 சதவீதத்தை உங்கள் மனதில் பதிய வைத்திட முடியும்.

*ஒரு நிமிடம் நீங்கள் சும்மா இருந்தால், பல்வேறு சிந்தனைகள் உங்களுக்குள் வந்துபோகும். அப்படி எந்த சிந்தனையும் தோன்றாமல் இருக்கும் நிலையே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலை.

*தினமும் பார்க்கும் காட்சிகளில் தேவைப்படுபவைகளை மட்டும், நினைவில் வைத்திருக்க பழக்கவேண்டும். 6, நேர்மறையான நிகழ்வுகளை மட்டும் நினைவில் வைத்திருப்பது, மனதை ஒருநிலைப்படுத்துவதன் ஆறாம் கட்டமாகும்.

*சித்தார்த்தன் என்ற இளவரசன் புத்தராக மாறியது போன்றது ஏழாம் நிலை. இந்த நிலையை அடையும்போது ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைப் போல் உங்கள் மூளை செயல்படும். நீங்கள் நினைவாற்றலில் சிறந்து விளங்குவீர்கள்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top