Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


கர்ப்பிணிகளே உங்கள் குழந்தை அழகா வெள்ளையா பிறக்கணுமா.?

பெண்களே உங்கள் குழந்தை அழகா வெள்ளையா பிறக்கணுமா.?

அனைத்து கர்ப்பிணிகளுக்குமே வயிற்றில் வளரும் குழந்தை நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக நமது முன்னோர்கள் கூறிய சில உணவுப் பொருட்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பார்ப்போம்....! 

குங்குமப்பூ பால்

நிறைய கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் குழந்தை வெள்ளையாக பிறப்பதற்கு குங்குமப்பூ பால் தான் குடிப்பார்கள். ஏனெனில் குங்குமப்பூவானது வயிற்றில் வளரும் குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும். 

தேங்காய்

வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டுமானால், தேங்காய் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் தேங்காயின் உட்பகுதி வெள்ளையாக இருப்பதால், இதனை உட்கொண்டால், வயிற்றினுள் வளரும் குழந்தையும் வெள்ளையாக பிறக்கும். 

பால்

கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிக்க வேண்டுமென்று சொல்வார்கள். ஏனென்றால் பாலை கர்ப்பிணிகள் அதிகம் குடித்தால், பால் போன்ற நிறத்தில் குழந்தை பிறக்குமாம்.

பாதாம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பாதாமை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை நல்ல நிறத்தில் பிறக்கும் அதிலும் பாதாம் பாலை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தை நன்கு வெள்ளையாக பிறக்கும்.

நெய்

ஆய்வுகளின் படி கர்ப்பிணிகள் நெய்யை உணவில் சேர்த்து வந்தால், பிரசவத்தின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். ஆனால் மற்றொரு பக்கம், நெய் சாப்பிட்டால அது குந்தையின் சரும நிறத்தை அதிகரிக்கும் என்று சொல்கின்றனர். என்ன தான் இருக்கட்டும், கர்ப்பிணிகள் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்ப்பது மிகவும் நல்லது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தை கர்ப்பிணிகள் மூன்று மாதம் கழித்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், குழந்தையின் சரும நிறத்தையும் அதிகரிக்குமாம்.

சோம்பு

கர்ப்பிணிகள் சோம்பு ஊற வைத்த நீரை குடித்து வந்தால், அது குழந்தையின் நிறத்தை அதிகரிக்குமாம். ஆனால் இந்த நீரை கர்ப்பிணிகள் காலையில் குடித்தால், சோர்வு ஏற்படுவதைத் தடுக்கலாம்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top