Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இங்கிலாந்தில் ஆபாச வீடியோ கேம்ஸ் விபரீதம்: தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்!.

இங்கிலாந்தில் ஆபாச வீடியோ கேம்ஸ் விபரீதம்: தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்!.

இங்கிலாந்தில் ஆபாச வீடியோ கேம்ஸ் விளையாடிய 13 வயது சிறுவன் அவற்றை செயல்படுத்த நினைத்து தனது 8 வயது சகோதரியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எக்ஸ்பாக்ஸ் இணையதளத்தின் வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்த பின்பு அதனை நடைமுறைப்படுத்தி பார்க்க விரும்பியுள்ளான் அந்த சிறுவன். 

அதற்காக தனது 8 வயது சகோதரியை தேர்வு செய்தான். மிகவும் சின்னப் பெண் என்பதால்,நடந்ததை மீண்டும் நினைவில் வைத்திருக்கமாட்டாள், யாரிடமும் கூறமாட்டாள் என்று நினைத்து தனது தங்கையை பலாத்காரம் செய்துவிட்டான். இதனை அடுத்து சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில் அச்சிறுவன் குற்றத்தை ஒப்பு கொண்டான். 

இதனை அடுத்து பிளாக்பர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் அவனை ஆஜர்படுத்தினர். அங்கு சகோதரியை தவறான நடத்தைக்கு பயன்படுத்தியதையும், பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டதையும் சிறுவன் ஒப்பு கொண்டான். இதனை அடுத்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவன் தனது உறவினர்களுடன் அனுப்பப்பட்டான். எனினும், சகோதரியிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டு உள்ளான். 

இந்த சம்பவத்தை அடுத்து அந்நாட்டு அரசு, 2014ம் ஆண்டு இறுதிக்குள், வீடியோ கேம்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உட்பட இன்டெர்நெட் கருவிகள் கொண்டு வயதுக்கு வந்தோர் பார்க்கும் காட்சிகளை பார்ப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top