Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


MLA -வுக்கு நடுரோட்டில் ‘பளார்’ விட்ட டெல்லி பெண்ணால் பரபரப்பு..(வீடியோ)

MLA -வுக்கு நடுரோட்டில் ‘பளார்’ விட்ட டெல்லி பெண்ணால் பரபரப்பு..(வீடியோ)

டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் சிலர் நிலத்தடி நீரை ‘போர்’ மூலம் உறிஞ்சி எடுத்து, விலைக்கு விற்பதாகவும், சங்கம் விகார் தொகுதியின் (ஆம் ஆத்மி) எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியாவுக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் நேரடியாக சங்கம் விகார் பகுதிக்கு சென்றார் தினேஷ் . நிலத்தடி நீரை விற்பதாக கூறப்பட்ட இடத்துக்கு அவர் செல்ல முனைந்த போது அவரை தடுத்து நிறுத்திய ஒரு பெண், முன்னேறி செல்ல விடாமல் எம்.எல்.ஏ.வுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அந்த பெண், தினேஷ் மொகானியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால், திகைத்துப் போன எம்.எல்.ஏ., ‘நிலத்தடி நீரை விலைக்கு விற்கும் மாஃபியா கும்பல், அந்த பெண்ணை ஏவி என்னை தடுத்து நிறுத்த சதி செய்துள்ளது. என்று கூறியுள்ளார்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top