Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பழங்களை எந்த நேரத்தில் எப்படி சாப்பிடனும் தெரியுமா..?

பழங்களை எந்த நேரத்தில் எப்படி சாப்பிடனும் தெரியுமா..?

பழங்களை சாப்பிடும் முறையும் அதனால் ஏற்படும் பலனும் பற்றி தமிழ் மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள செய்தி......

பழங்களை பழரசமாகவோ,வேகவைத்தோ சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது.

பழம் சாப்பிடும் போது திருப்தி ஏற்படும் வரையில் சாப்பிட வேண்டியது அவசியம். ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வயிறு நிறையவில்லை எனில் இன்னொரு ஆப்பிள் சாப்பிடலாம். வயிறு நிரம்பினால் பழம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அடுத்த 90 நிமிடங்கள் வேறு ஒன்றும் சாப்பிட வேண்டாம்

பழத்தை நறுக்கி சாப்பிடுவதைவிட கடித்து சாப்பிடுவது நல்லது. நறுக்கி சாப்பிடும்போது வைட்டமின் ‘சி’ மற்றும் ‘ஏ’ சத்துக்கள் குறைந்து விடுகின்றன.

மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கும். உடலில் இரத்தம் அதிகரிக்கும்.

வாழைப்பழம்,ஆப்பிள்,திராட்சை,பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை சாத்துக்குடியில் செய்த பழச்சாற்றை சாப்பிடலாம்.9 மணி முதல் 12 மணி வரை ஆரஞ்சு, பப்பாளி , பேரிக்காய் போன்றவை சாப்பிடலாம்.மாலை நேரங்களில் மாம்பழம்,மாதுளம் பழம் ,செர்ரி, திராட்சை , தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்தால் , இரத்தக் கொதிப்பு முதல் பலவகையான நோய்களை தடுக்கலாம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top