Select Menu
  • Home
  • News
  • Cinema
  • Sri Lanka
  • Tech
  • Tamil Fm
  • Chat Room
  • Tamil Typing
  • Top 18 post
  • Daytamil »
  • Home
  • Advertise with us
  • Contact us
Day Tamil | Tamil News | Online Tamil News | Tamil Portal | தமிழ் செய்திகள் | டே தமிழ்
  • Home
  • News
    • Tamil Latest News
    • Tamil Cinema News
    • Tamil Srilanka News
    • Tamil Tech News
  • Tamil Fm
  • Tamil Chatrooms
  • Tamil Typing
  • Top 18 Post...
Home மருத்துவம் வினோதம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய இளநீரின் மருத்துவ குணங்கள்!.

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய இளநீரின் மருத்துவ குணங்கள்!.

 Saturday, 22 February 2014     மருத்துவம் , வினோதம்    
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய இளநீரின் மருத்துவ குணங்கள்!.

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். 

இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது. இந்த நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது. 

மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது. மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? சரி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா? 

எடை குறைவு

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் அதனை பருகினால் வயிறு நிறைந்து போவதால், அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது. 

வயிற்றுப்போக்கு

வயிற்றுக் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மேன்கனீஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன. மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவும். 

நீரிழிவு

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. 

வைரஸ் நோய்கள்

சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகள் நம் உடம்பை தாக்குவதால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அஅடங்கியிருப்பதால், மேற்கூறிய வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது. 

உடல் வறட்சி

உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம். 

இரத்த அழுத்தம்

இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது. 

சிறுநீரக கற்கள்

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும். 

சரும பிரச்சனைகள்

பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும். 

புற்றுநோய்

சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும். 

பொலிவான சருமம்

இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களின் கலவை உள்ளன. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாக மின்னும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Smiley face
Ads by Ujiladevi

tamil hot news


Featured Post

ஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை!.

Blog Archive

Popular Posts

  • தொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்!.


உஜிலாதேவி பார்க்க படிக்க
    அஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை

Find Us On Facebook

உஜிலாதேவி
Day Tamil © 2012
Day Tamil is a tamil news Portal offering online tamil news, Day Tamil movie news , Day Tamil blogs, Day Tamil bookmarks,Day Tamil pictures, Day Tamil astrology, Day Tamil videos, Day Tamil art culture,Day Tamil literature, Day Tamil sports news in tamil, Day Tamil recipes,Day Tamil kollywood, Day Tamil chennai classifieds, Day Tamil business, Day Tamil latest Tamil Nadu politics news and more

Daytamil »