Select Menu
  • Home
  • News
  • Cinema
  • Sri Lanka
  • Tech
  • Tamil Fm
  • Chat Room
  • Tamil Typing
  • Top 18 post
  • Daytamil »
  • Home
  • Advertise with us
  • Contact us
Day Tamil | Tamil News | Online Tamil News | Tamil Portal | தமிழ் செய்திகள் | டே தமிழ்
  • Home
  • News
    • Tamil Latest News
    • Tamil Cinema News
    • Tamil Srilanka News
    • Tamil Tech News
  • Tamil Fm
  • Tamil Chatrooms
  • Tamil Typing
  • Top 18 Post...
Home மருத்துவம் வினோதம் மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை வரம் கொடுக்கும் அபூர்வ மூலிகைகள்!.

மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை வரம் கொடுக்கும் அபூர்வ மூலிகைகள்!.

 Saturday, 18 January 2014     மருத்துவம் , வினோதம்    
மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை வரம் கொடுக்கும் அபூர்வ மூலிகைகள்!.

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.

ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன். 

ரோஜா குல்கந்து

ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது. 

பூசணிக்காய்

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். 

பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும். 

இலுப்பை பூ

இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். 

ஆலம்பழம்

சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். 

தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Smiley face
Ads by Ujiladevi

tamil hot news


Featured Post

ஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை!.

Blog Archive

Popular Posts

  • தொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்!.


உஜிலாதேவி பார்க்க படிக்க
    அஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை

Find Us On Facebook

உஜிலாதேவி
Day Tamil © 2012
Day Tamil is a tamil news Portal offering online tamil news, Day Tamil movie news , Day Tamil blogs, Day Tamil bookmarks,Day Tamil pictures, Day Tamil astrology, Day Tamil videos, Day Tamil art culture,Day Tamil literature, Day Tamil sports news in tamil, Day Tamil recipes,Day Tamil kollywood, Day Tamil chennai classifieds, Day Tamil business, Day Tamil latest Tamil Nadu politics news and more

Daytamil »