Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில் இது சாத்தியமா..?

ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில் இது சாத்தியமா..?

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி. அதன் புறநகர்ப் பகுதி. நீளமான பெரிய வீடு. அந்தப் பெரிய வீட்டில் 30 பேர். ஓர் அப்பா... ஐந்து அம்மாக்கள்... மொத்தம் 24 பிள்ளைகள். இந்தக் காலத்தில் இப்படியா..? என்று மூக்கில் விரலை வைக்கிறீர்களா? "ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள்' பாடே இங்கே திண்டாட்டமாக இருக்கும்போது ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில்... வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிராடி வில்லியம்ஸ்.

இவ்வளவு பெரிய குடும்பத்தின் தேவைகளை வில்லியம்ஸ் எப்படி சமாளிக்கிறார்...? அவருடைய சகோதரர் நடத்தும் கட்டுமானத் தொழிலில் புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார் அவர். முதல் மனைவி பாலியை 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன 9 மாதத்தில் ரோபின் என்ற இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 

இதை அறிந்ததும் முதல் மனைவி பாலி இவரைக் கடித்துக் குதறவில்லை. குறைந்தபட்சம் தரையில் விழுந்து அழுது புரளவில்லை. கவலைப்படவுமில்லை.அவர் பாட்டுக்கு அவருடைய பல் மருத்துவத் தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தார். இரண்டாவதாக வந்த ரோபின் கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர். கைவினைப் பொருட்களை எப்படிச் செய்வது என்று வகுப்பு எடுப்பவர். 

முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்ததுமே தானுண்டு தன் இரு மனைவிகள் உண்டு என்று இருந்திருக்கலாம் வில்லியம்ஸ். ரோஸ் மேரி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். ரோஸ்மேரி இசையில் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறார். 

நானி என்ற பெண் மான்டனா மாகாணத்தைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸக் கண்டதும் காதல் கொண்டுவிட்டார் நானி. பிறகென்ன? வில்லியம்ஸின் நான்காவது மனைவியானார். இப்போது நானி 5 குழந்தைகளின் தாய். வில்லியம்ஸ் வேலை செய்யும் அதே கட்டுமானத் தொழிலின் நிர்வாகப் பிரிவை இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.

இரண்டாவது மனைவி ரோபினின் சொந்தக்காரப் பெண் ரோன்டா. மருத்துவ உதவியாளர் வேலை. 12 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸின் 5 ஆவது மனைவியானார் ரோன்டா. இப்போது 4 குழந்தைகள் பிறந்துவிட்டன. இவ்வாறு ஐந்து மனைவிகளுமே "வீட்டோடு' இருக்காமல், வேலை செய்து கொண்டிருப்பதால் இவ்வளவு பெரிய குடும்பச் சுமையை வில்லியம்ஸால் சுமக்க முடிகிறது. எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்வதுதான் இதில் அதிசயப்பட வேண்டிய ஒன்று....!

ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில் இது சாத்தியமா..?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top