Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஜில்லா, வீரம் வசூல் எவ்ளோ தெரியுமா..?

ஜில்லா, வீரம் வசூல் எவ்ளோ தெரியுமா..?

விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வந்துள்ளன. அதன்படி 1200 அரங்குகளில் உலகெங்கும் வெளியாகியுள்ள ஜில்லா முதல் நாளில் மட்டும் ரூ 11 கோடி வசூலித்துள்ளது. விஜய் படங்களில் வேறு எந்தப் படமும் இந்தத் தொகையை வசூலித்ததில்லை. 

அஜீத்தின் வீரம் முதல் நாளில் மட்டும் ரூ 9.36 கோடிகளை வசூலித்துள்ளது. வீரம் விமர்சகர்களின் பாராட்டை மட்டும் அல்ல தியேட்டர்களில் வசூலிலும் சக்கை போடு போடுகிறது.இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களிலும் இரு படங்களின் வசூலும் மிகவும் ஸ்டெடியாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் கூறுகின்றன. கேரளாவில் ஒரு நேரடி தமிழ்ப் படம் கூட வசூலிக்காத அளவுக்கு ஜில்லாவின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது. 

அங்கு இந்தப் படம் ரூ 2.62 கோடியை முதல் நாளில் குவித்து கேரள திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் இன்னொரு ஹீரோ மோகன் லால் என்பதும் மறுக்க முடியாத உண்மை. வீரம் தமிழகம், கர்நாடகா தவிர அமெரிக்கா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top