Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்கள் கையில் இனி துப்பாக்கி..உஷார் ஆண்களே!.

பெண்கள் கையில் இனி துப்பாக்கி..உஷார் ஆண்களே!.

பெண்களை தற்காத்து கொள்வதற்காக அவர்களுக்காகவே துப்பாக்கி ஒன்று அறிமுகமாகிவுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டெல்லி மருத்துவ மாணவியின் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பின்பு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள் அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 6 ஆம் தேதி கான்பூரை சேர்ந்த இந்திய ஆயுத தொழிற்சாலை ஒன்றால் ”நீர்பிக்” என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சில சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் எடை வெறும் அரை கிலோ தான்.இதில் 6 குண்டுகளை நிரப்பி ஆறுமுறை சுடலாம் .பின்பு மீண்டும் தோட்டாக்களை லோட் செய்து கொள்ளலாம்.

டைட்டானியம் அல்லாய் உலோகத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கி பார்ப்பதற்கு சின்னதாய் இருப்பதால் இதனை கைப்பை அல்லது பர்சில் வைத்து கொள்ளலாம். ஆனால் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும் இத்துப்பாக்கி விலையில் மிக பெரிய அளவில் உள்ளது.

இதன் விலை 1 லட்சத்தி 22 ஆயிரத்தி 360 ரூபாய் ஆகும். இதன் விலை அதிகம் என்ற போதிலும் இதற்கு சில பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 20 பேர் இத்துப்பாக்கியை வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.,,,!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top