Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


செவ்வாய் கிரகத்தில் தோன்றிய அமானுஷ்ய பாறையால் பரபரப்பு!.

செவ்வாய் கிரகத்தில் தோன்றிய அமானுஷ்ய பாறையால் பரபரப்பு!.

செவ்வாய் கிரகத்தை ஆப்பர்சூனிட்டி விண்கலம் எடுத்த புகைப்படமொன்றில் புதிதாக பாறை ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பர்சூனிட்டி விண்கலம் உதவியுடன் புதுமையான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆப்பர்சூனிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது. 

இது செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறைகளை படம் எடுத்து அனுப்பியது. இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஸ்டீவ் ஸ்குவேர்ஸ் குறிப்பிடுகையில், இந்தப் பாறையின் விளிம்புகள், வெண்மை நிறமாகவும் மையப்பகுதி அடர் சிவப்பு நிறத்துடனும் காணப்படுகிறது. இதுபோன்ற பாறையை இதற்கு முன் கண்டதில்லை, இதில் கந்தகம் மற்றும் மெக்னீஷியம் அதிகளவில் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

பின்னாகில் ஐலாண்ட்...'' என அழைக்கப்படும் இந்த பாறையை ஜனவரி 8 ஆம் தேதி ஆப்பர்சூனிட்டி விண்கலம் படமெடுத்தது. இந்த புகைப்படத்தில் இருந்த இந்த பாறை அதே இடத்தில் 13 நாட்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது....!

செவ்வாய் கிரகத்தில் தோன்றிய அமானுஷ்ய பாறையால் பரபரப்பு!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top