Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஸ்டாலின் மரணத்திற்கு நாள் குறித்த அழகிரி..பரபரப்பு தகவல்!.

ஸ்டாலின் மரணத்திற்கு நாள் குறித்த அழகிரி!.

அழகிரி தம்மையும் ஸ்டாலினையும் பற்றி விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார் என்றும், ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்து விடுவார் என கூறியதை எப்படிப் பொறுப்பது என்றும் அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் விளக்கியபோது.....

அழகிரி கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தது தவறு. அவர் தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக் குழு முடிவுக்கு எதிராக செயல்பட்டார். செயலாளர் பொறுப்பை மறந்து செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்டாலின் இன்னும் 3மாதத்தில் இறந்துவிடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலேயே சொன்னார்.எந்த தகப்பனாரால் இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும்? 

நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன். நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கா கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும். 

அண்ணா காலத்தில் இருந்து இதுவரை எத்தனையோ சோதனைகளை சந்தித்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழக மக்கள் வளத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக 16 வயது முதல் இந்த சமுதாயத்திற்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். இன்று பத்திரிகையாளர்களிடம் இந்தச் செய்திகளை தெரிவித்துள்ளேன் -என்று கருணாநிதி செய்தியாளர் களிடம் விளக்கமளித்தார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top