Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தீ விபத்தில் 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப முடிவு!.

தீ விபத்தில் 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப முடிவு!.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டைலர் தூகன். இவன் பென்பீல்டு நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தான். அந்த வீட்டில் நடமாடும் படுக்கை அறை உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த படுக்கை அறையில் திடீரென தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே டைலர் தூகன் அதிவிரைவாக செயல்பட்டான். எரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் பாய்ந்து சென்றான். தீயில் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தான். அவர்களில் 2 பேர் குழந்தைகள். அவர்களின் வயது தலா 4 மற்றும் 6 ஆகும். ஆனால் அவனது தாத்தா மட்டும் தீயில் சிக்கி கொண்டார். 

உடல் ஊன முற்று இருந்ததால் படுக்கையில் இருந்த அவரால் வெளியே வர முடிய வில்லை. எனவே தாதாவை தூக்கி கொண்டு வெளியே வர முயன்றபோது புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கினான். இதனால் உடல் கருகி பரிதாபமாக இறந்தான். சிறிய வயதில் 6 பேரை காப்பாற்றிய சிறுவன் டைலர் தூகனின் வீரதீர செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். அதே நேரத்தில் அவன் மரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top