Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மனைவியை கொன்றவனை கொடூரமாக பழி வாங்கிய இளைஞர்..அதிர்ச்சி வீடியோ!.

மனைவியை கொன்றவனை கொடூரமாக பழி வாங்கிய இளைஞர்..அதிர்ச்சி வீடியோ!.

ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையைக் கொன்றவரை கொன்று அவருடைய மாமிசத்தைத் தின்று தனது வெறியை தீர்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் சமீபத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இந்த நிலையில் தலைநகர் பெங்குயிவில் நடந்த கலவரத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, மனைவியின் தங்கை மற்றும் குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனால் அந்த நபர் கடும் ஆத்திரத்துடன், வெறியுடன் இருந்தார். தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை கொன்றவரை பழிக்கு பழிவாங்க காத்திருந்தார். 

இந்த நிலையில் அவரது மனைவியை கொன்றவர் ஒரு பேருந்தில் புறப்பட்டுச் சென்றதை அறிந்தார். உடனே தனது ஆதரவாளர்கள் 20 இளைஞர்களை திரட்டி கும்பலாக சென்றார். பின்னர் அந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தினார். தனது மனைவியை கொடூரமாக கொன்ற அந்த நபரை பேருந்திலிருந்து வெளியேற்றினார். அவரை தெருவில் தரதரவென இழுத்து வந்தார். 

பிறகு அவரை கத்தியால் குத்தி கொன்றார். அதை தொடர்ந்து அந்த நபரின் உடலை தீ வைத்து எரித்தார். இருந்தும் அவரது ஆத்திரம் தீரவில்லை. கொலை செய்யப்பட்ட நபரின் கால் மாமிசத்தை தின்று தனது பழிவாங்கும் வெறியை தணித்துக் கொண்டார். கொடூரமாக நடந்து கொண்ட அவர் தனக்குத்தானே "பைத்தியக்கார நாய்" என பெயரிட்டு கொண்டார்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top