Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


போனில் ஆபாசமாக பேசிய நபரை கதற விட்ட நடிகை..? என்ன செய்தார் தெரியுமா..?

போனில் ஆபாசமாக பேசிய நபரை கதற விட்ட நடிகை..? என்ன செய்தார் தெரியுமா..?

கன்னட மொழி படங்களில் நடித்து வரும் இளம் நடிகை சஞ்சனாவுக்கு மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார். அவருக்கு நடிகை தகுந்த பாடம் புகட்டியுள்ளார்.

ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா. சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் மொபைல் போனில் நடிகை சஞ்சனாவுடன் பேசிய ஒருவர் ஆபாசமாக பேசத் துவங்கினார். அதைத் தொடர்ந்து தினமும் நள்ளிரவுகளில் அவர் சஞ்சனாவுக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் எரிச்சலடைந்த சஞ்சனா நள்ளிரவில் மொபைல் போன் ஒலித்தால் எடுத்து பேசுவதை தவிர்த்தார். 

ஆனாலும் அந்த நபர் சஞ்சனாவின் வீட்டிலுள்ள மற்ற டெலிபோன் எண்களுக்கு அழைத்து தன் செயலை தொடர்ந்தார். இந்த மர்ம நபருக்கு பாடம் புகட்டியே தீர வேண்டும் என்று முடிவு செய்த சஞ்சனா.இதற்காக போலீசாரிடம் செல்லாமல் மற்றொரு தந்திரத்தைக் கையாள முடிவு செய்தார்.தொல்லை கொடுத்த நபரின் மொபைல் போன் எண்ணை சமூக வலைதளமான 'டுவிட்டரில்' போட்டார். 

இந்த எண்ணுக்கு சொந்தமான நபர் தினமும் நள்ளிரவு முழுவதும் போனில் அழைத்து ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுக்கிறார். உண்மையான ரசிகர்கள் அந்த நபருக்கு சரியான பாடம் புகட்டுங்கள் என்றும் அதில் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து, சஞ்சனாவின் ரசிகர்கள் அந்த மர்ம நபரை போனில் அழைத்து வாய்க்கு வந்தபடி வசை பாடத் துவங்கினர்; சிலர் அவருக்கு மிரட்டலும் விடுத்தனர். 

இதனால் பயந்து போன அந்த நபர் மீண்டும் சஞ்சனாவுக்கு போன் செய்தார். 'மேடம் தவறு நடந்து விட்டது என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் காலில் விழுகிறேன் தயவு செய்து என் போன் நம்பரை டுவிட்டரில் இருந்து அகற்றி விடுங்கள். எனக்கு ஏற்கனவே பல பிரச்னைகள் உள்ளன' என கதறினார். இதன் பின் அந்த மர்ம நபரின் எண்ணை டுவிட்டரில் இருந்து நீக்குவது குறித்து சஞ்சனா ஆலோசித்து வருகிறார்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top