ஆண்மையை அதிகரிக்கும் சக்தி தக்காளியில் அதிகம் இருப்பதாக லண்டன் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிட்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தக்காளி குறித்து ஓர் ஆய்வு நடத்தினர். தக்காளி ஆண்மையை அதிகரிப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் போதும். ஆண்களுக்கு வீரியத் தன்மை அதிகரிக்கிறது. விந்துவில் உயிரணுக்கள் குறைபாடே குழந்தை இன்மைக்கு காரணம். இதை தடுக்க சிறந்த மருந்து தக்காளிதான்.
தினமும் தக்காளி சூப் சாப்பிட்டால் இந்த குறைபாடு நீங்கிவிடும். தக்காளியில் உள்ள "லைகோபின்' தான் சிவப்பு நிறத்தை தருகிறது. இந்த சிவப்பில்தான் வீரியம் நிறைந்திருக்கிறது. கொய்யா, பப்பாளியிலும் லைகோபின் உள்ளது.
இரண்டு வாரம் தொடர்ந்து தக்காளி சூப் குடித்தால் ஆண்களின் வீரிய சக்தியில் லைகோபினின் அளவு 7ல் இருந்து 12 சதவீதமாக அதிகரிகிறது. குழந்தையின்மை குறைபாட்டை போக்க தக்காளியும் உதவும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது...!