Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


புற்றுநோயை உருவாக்கும் கொசு விரட்டி ஒரு ஷாக் ரிப்போர்ட்!.

மலட்டுத் தன்மையை உருவாக்கும் ‘கொசு விரட்டி’ ஒரு ஷாக் ரிப்போர்ட்!.

கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்கவும் இரவு நன்கு தூங்கவும் கொசுவர்த்தி சுருள்,மேட்,கிரீம் என அதன் விலையைப்பற்றி கவலைப்படாமல் நாம் வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் அன்றைய இரவுப்பொழுது நிம்மதியாக கழிந்தாலும் கூட… இவற்றால் நம் ஆரோக்கியத்திற்கும், பணத்திற்கும் கேடு என்கிறது விஞ்ஞானம்.....

காரணம் கொசுவர்த்திச் சுருள்கள் மற்றும் மேட்களை உருவாக்க செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின்,டாலத்ரின் டி, டிரான்ஸாலத்ரின் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி நாம் இக்காற்றை சுவாசிக்கும் காலம் அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. 

கண்ணுக்கு எளிதில் தெரியாத கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறு மணிக்கே ஜன்னல் கதவுகளை சாத்திவிடுவது நமது வழக்கம். இதனால் புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அடைபட்ட காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்கள் பிராணவாயு மிகவும் குறைந்துவிடுகிறது. 

இதோடு புகையும கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்துவிடுகின்றன. போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசு விரட்டிகளை வேறு வழியின்றி பயன்படுத்த தொடங்கிவிடுகிறோம். இதனால் வீட்டில் இருந்த சிறிதளவு பிராணவாயுவும் கெட்டு விடுகிறது. ஆக இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு கொசு விரட்டிகளால் நமது உடலில் சேரும் விஷம் சளிபிடித்தல், காய்ச்சல் ஆகியவை மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது. 

மூன்று நாட்களில் சளி மற்றும் ஜுரம் குறையாததால் அதற்கு ‘அலர்ஜி’ எனப் பெயர் சூட்டி, அந்தச் செயலை முடக்க ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மருந்துகளையும் ஆரோக்கியமாக உடல் தாக்குப் பிடிக்காமல் திணறுகிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் செயல்முறை படிப்படியாக இழந்து விடுகிறது. 

இதனால் படை வீரர்களை இழந்த கோட்டையைப் போல சக்தியை இழந்த உடலாக நமது உடல் மாறிவிடுகிறது. பிறகு என்ன....? நோய்களுக்கு கொண்டாட்டம்தான். தொடர்ந்து கொசுவிரட்டி உபயோகித்து வருகிறவர்களுக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. பிறகு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவுக்கு உண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விடுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

மும்பையின் நுகர்வோர் வழிகாட்டும் கழகத்தின் ஆய்வு முடிவுப்படி கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது என்பது கூடுதலான ஒரு ‘ஷாக்’ தகவல். கொசுவிரட்டியில் உள்ள ‘டயோக்சின்’ எளிதில் புற்றுநோயை உருவாக்க சர்வசக்தி வல்லமை கொண்டது. 

அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல இழக்கச் செய்யவல்லது. ‘மேட்’ புகையை பிஞ்சுக்குழந்தைகள் இரவு முழுவதும் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படலாம் என்கிறது லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். 

சரி அப்படியென்றால் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் உட்கார்ந்து இருக்க முடியுமா....? கொசுக்களை தேடித் தேடித்தான் அடிக்க முடியுமா என ஆவேச புலம்பல்கள் நம்மிடம் வரத்தான் செய்யும். கொசுக்களைத் தடுக்க ஒரே எளிய வழி கொசுவலை மட்டுமே. இது பாதுகாப்பானது. சிக்கனமானதும் கூட. உங்கள் வீட்டு ஜன்னல்களில் கொசுவலையை அடித்துவிட்டு.....

நீங்கள் படுக்கும் மெத்தையின் மேலிருந்து கீழே போர்த்தியபடி கொசுவலையை தொங்கவிடுங்கள். பிறகு என்ன கொசுக்களுக்கு மட்டுமல்ல ரசாயன கோளாறுகளுக்கும் எளிதில் ‘குட்பை’ சொல்லிவிடலாம்! இது கொசுவலைகளுக்கான விளம்பரம் அல்ல. போனால் வராத உயிரை பாதுகாக்க ஒரு எச்சரிக்கை....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top