Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரயிலில் இறங்கிய போது நடைமேடைக்கு இடையே சிக்கி பலியான பெண்...அதிர்ச்சி வீடியோ!.

ரயிலில் இறங்கிய இளம்பெண் நடைமேடைக்கு இடையே சிக்கி பலி..அதிர்ச்சி வீடியோ!.

கான்பூரில் ரயிலில் இருந்து இறங்க முயன்ற ஒரு இளம்பெண் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்க 45 நிமிடங்கள் ஆனதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவதற்கு முன்பே உயிரிழந்தார்.இது தொடர்பாக தெரிவித்த அப்பெண்ணின் பெற்றோர் எங்களது மகள் ரயிலில் இருந்து இறங்க தயாராக இருந்தார்.

அவர் இறங்குவதற்கு முன் அவருக்கு பின்னால் நின்றுக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர் தேர்வுக்கு செல்லும் அவசரத்தில் எனது மகளை கீழே தள்ளிவிட்டனர்.இதனால் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட அவளை ரயில்வே துறையினர் மீட்க 45 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதால்தான் என் மகள் உயிரிழந்தார் எனக் கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ரயில்வே அதிகாரிகள் ரயிலில் பயணம் செய்த அப்பெண் ரயில் நிற்பதற்கு முன்பே இறங்க முயன்றுள்ளார். இதனால் கால் தவறி அவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இது தினமும் நடக்கும் சம்பவம் இல்லை. அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக நாங்கள் நடைமேடையை உடைத்துள்ளோம். இந்த சம்பவத்தில் தவறு முழுவதும் அப்பெண்ணுடையது என குறிப்பிட்டுள்ளனர்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top