Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ATM - மில் பணம் எடுக்கும் முன் இத மனசுல வைங்க (மக்களே எச்சரிக்கை)

ஏ.டி.எம் - மில் பணம் எடுக்கும் முன் இத மனசுல வைங்க...(மக்களே எச்சரிக்கை)

நாட்டையே உலுக்கிய பெங்களூர் ஏ.டி.எம் சம்பவத்திற்குப் பின்னர் ஏ.டி.எம் இயந்திரங்களை பயன்படுத்துவதில் உள்ள வசதிகளை விட பாதுகாப்பு அம்சங்கள் முதன்மையான விஷயங்களாக பேசப்பட்டு வருகின்றன.ஏ.டி.எம்-களில் நடக்கும் திருட்டுக்கள் பற்றி முழுமையான தகவல்கள் இல்லாமலிருந்தாலும் உள்ளூர் செய்தித் தாள்களில் இவ்வாறான செய்திகள் தினசரி வந்து கொண்டு தான் உள்ளன. 

வங்கிகளிலேயே பணப் பட்டுவாடா செய்யும் கேஷ் மெஷின் இயந்திரங்களை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தாலும், ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்களில் அவை சரியான தேர்வு இல்லை. ஏற்கனவே பாதுகாப்புகளுக்காக நாம் பின்பற்றி வந்த சில செயல்களை ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும் போது பயன்படுத்தினாலேயே போதும், 

இது போன்ற திருட்டுக்களுக்கு நீங்கள் பலியாகாமல் இருக்க முடியும். மிண்ணணு பண மாற்று அமைப்பு (Electronic Funds Transfer Association) ஏ.டி.எம் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு டிப்ஸ்களை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளனர். ஏ.டி.எம் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்......

பாதுகாப்பான இடம் 

ஏ.டி.எம் இருக்கும் இடம் மற்றும் உங்கள் சுற்றுப் புறத்தை எப்பொழுதும் சற்றே கவனமுடன் கண்காணியுங்கள். கட்டிடத்தின் மூனையில் உள்ள ஏ.டி.எம்-களை தவிர்த்து கட்டிடங்களின் மத்தியப் பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம்-களை பயன்படுத்தவும். பொதுவான மற்றும் நல்ல வெளிச்சமான இடங்களில் உங்கள் ஏ.டி.எம் செயல்பாடுகளை மேற்கொள்ளவும். இந்த இடங்கள் எந்தவிதமான அலங்காரங்களாலும் மறைக்கப்பட்டிருக்கக் கூடாது. 

புதிய நபர்கள் 

நீங்கள் பணப்பரிமாற்றத்தை முழுமையாக நிறைவேற்றும் வரையிலும் உங்கள் சுற்றுப்புறத்தை நன்றாக கவனித்து வாருங்கள். ஏ.டி.எம் பரிமாற்றங்களை செய்யும் போது, உங்களுக்கு உதவியாக புதிய நபர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம். 

பாதுகாப்பு வழிகள் 

ஏ.டி.எம்-களை விட்டு வெளியே செல்லும் போது உங்களை யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி ஏதேனும் நடந்தால் போலீஸ் அல்லது தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கவும் அல்லது ஜன சந்தடியுள்ள, வெளிச்சமான அல்லது வியாபார தளங்களுக்குள் புகுந்து கொள்ளவும். 

ஆபத்து நிறைந்த ஏடிஎம் 

சந்தேகத்திற்கிடமான அல்லது உங்களுக்கு பரிச்சயமில்லாத வகையில் இருக்கும் ஏ.டி.எம்-களை பயன்படுத்த வேண்டாம். 

பின் நம்பர் 

நீங்கள் இரகசிய எண்ணை டைப் செய்யும் போது உங்கள் பின்னாலிருந்து யாரையும் அந்த எண்ணைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். மேலும், இரகசிய எண்ணை ஏ.டி.எம் அட்டையின் பின் பகுதியில் எழுதி வைக்க வேண்டாம். 

மெஷினில் அட்டை சிக்கிக் கொண்டால்

ஏ.டி.எம்-மெஷினில் உங்கள் அட்டை சிக்கிக் கொண்டால், இரகசிய எண்ணை மீண்டும் அழுத்தாமல், சம்மந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும். 

சாலையோர ஏ.டி.எம்கள் 

நீங்கள் சாலையோர ஏ.டி.எம்-களை பயன்படுத்தினால், உங்கள் எஞ்சினை அணைக்காமல், கதவுகளை மட்டும் மூடி வைக்கவும். காருக்கும் உங்களுக்கும் இடையில் போதிய இடைவெளியும் இருக்குமாறு கவனித்துக் கொள்ளவும். 

டெபாசிட் உறைகள்

பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய பயன்படுத்தும் டெபாசிட் உறைகளை உங்கள் கார் அல்லது வீடுகளில் வைத்திருக்கவும். அனைத்து விதமான எழுத்துப் பணிகளையும் ஏ.டி.எம்-ற்கு செல்வதற்கு முன்னரே சரியாக எழுதி எடுத்துச் செல்லவும். இதன் மூலம் ஏ.டி.எம்-ல் நீங்கள் செலவழிக்கும் நேரம் குறையும். 

பணத்தை எண்ண வேண்டாம்

ஏ.டி.எம் உள்ளேயோ அல்லது வெளிப்படையாகவோ பணத்தை எண்ண வேண்டாம். உங்களுடைய கார் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வரும் வரை பொறுமையாக இருக்கவும். 

புகார்

உங்களிடம் யாராவது பணம் பறிக்கும் நிலையை எதிர்கொள்ள நேரிட்டால், பீதி அடையாமல் போலீசாரிடம் புகார் கொடுக்கவும்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top