Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



அண்ணா ப்ளீஸ் என்னை காலி பண்ணிடாதீங்க தளபதியின் கெஞ்சல் ரகசியம்..?

அண்ணா ப்ளீஸ் என்னை காலி பண்ணிடாதீங்க..விஜயின் கெஞ்சல் ரகசியம்..?

பத்திரிகையாளர்களுக்கு பிரியாணித் திருவிழா நடத்தும் இளைய தளபதி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். சச்சின் படத்திலிருந்தே விஜய்க்கு ஒரு பழக்கமுண்டு....

தனக்கு மிகவும் பிடித்தமான பத்திரிகையாளர்களை மட்டும் தனது நீலாங்கரை வீட்டுக்கோ அல்லது கோடம்பாக்க அலுவலகத்துக்கோ வரவழைத்து மனம்விட்டு பேசி அனுப்புவார். இதேப்போல் நேற்று நடந்த சந்திப்பிலும் குறிப்பிட்ட சில நிருபர்களை மட்டும் அழைத்து பேசியுள்ளார். 

இதில் பேசிய விஜய்... 'அண்ணா இந்தப் (ஜில்லா) படம் நல்லபடியா ரிலீஸ் ஆகணும் அதுனால தயவு செய்து எதிர்மறையா எதுவும் எழுதி காலி பண்ணிடாதிங்க' ன்னு தனது பணிவான கோரிக்கையை விடுத்துள்ளார். 

இந்த விருந்தில் பங்கேற்ற நிருபர்களுக்கு இளைய தளபதி அதிகம் பேசாமல் அனுப்பியது கூட வருத்தமில்லையாம். ஆனால் ட்விட்புக்கில் போஸ்ட் செய்ய ஒரு புகைப்படம் கூட எடுப்பதற்கு அனுமதி தராதது தான் பெரிய கவலையாம்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top