Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


தன்னை கற்பழித்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுத்த ஆடு..??

தன்னை கற்பழித்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுத்த ஆடு..??

கென்யாவில் ஆட்டிடம் தகாத உறவுகொண்ட இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் மலிந்தி நகரைச் சேர்ந்தவர் கோனா(28). மதிய வேளையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இவர் கடும் வெயில் தாக்கத்தால் சற்று ஓய்வெடுப்பதற்காக சாலை ஓரத்தில் இருந்த மர நிழலில் ஒதுங்கினார். அங்கு ஒரு ஆடு கட்டப்பட்டு இருந்தது. 

தனிமையில் இருந்த ஆட்டைக் கண்ட கோனா அதனிடம் தவறாக நடந்து கொண்டார். தகாத உறவால் வலி தாங்க முடியாமல் கத்திய ஆட்டின் அலறல் சத்தம் கேட்ட பெண் ஒருவர் கோனா செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆட்டின் உரிமையாளரிடம் இதை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆட்டின் உரிமையாளர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

ஆட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோனாவை கைது செய்த போலிசார் விசாரணைக்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோனா ஆட்டிடம் உறவு கொண்டாரா என்பதை உறுதி செய்ய ஆட்டுக்கு, கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் ஆடு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. 

ஆனால் கோனா தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்ததால் போலிசார் பாதிக்கப்பட்ட ஆட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.மேலும் கோனாவுடன் சேர்த்து சில நபர்கள் ஆட்டின் முன் நிற்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஆடு மற்றவர்களைத் தவிர கோனாவையே உற்றுப் பார்த்தது.

கால்நடை மருத்துவர் வழங்கிய மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் ஆடு கோனாவையே உற்றுப் பார்த்த விதம் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு, அவரை குற்றவாளி என முடிவு செய்த நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top