Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இனி ஒரே வீட்டில் கணவருடன் மனைவி – காதலி வாழலாம்!...

இனி ஒரே வீட்டில் கணவருடன் மனைவி – காதலி வாழலாம்!...

மனைவிக்கு 15 நாளும், லிவ் இன் பார்ட்னருக்கு 15 நாள் என்றும் ஒதுக்கி இருவரையும் சம அளவில் பாவிக்குமாறு மத்தியப் பிரதேச மாநிலலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அங்குள்ள லோக் அதாலத் கோர்ட் அறிவுரை கூறியது சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரேஸ்வர் என்ற ஊரைச் சேர்ந்தவர் பகந்த் மஹுலால்.. மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். இவருக்கு ஒரு மனைவியும், காதலியும் உண்டு. இருவருக்கும் இவர் சமமாக நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்களையும் ஒதுக்க முடியவில்லை. 

இந்த நிலையில் மனைவியை விட அதிக நேரம் காதலிக்கு ஒதுக்கி வந்தாராம் இந்த ரிடையர்ட் ஆசாமி. மேலும் காதலியை தனது வீட்டுக்கே கூட்டி வந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி லோக் அதாலத்தில் வழக்குப் போட்டார். தன்னிடம் பாரபட்சமாகவும், காதலியிடம் அதிக பாசம் காட்டியும் கணவர் நடந்து கொள்வதாக அவர் முறையிட்டார். 

இந்த வழக்கை நீதிபதி கங்கா சரண் துபே விசாரித்தார். பின்னர் அவர் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார். அவரது தீர்ப்பைப் பாருங்கள்... மனைவியும், காதலியும் ஒரே வீட்டில் வசிக்கலாம். ஒரு மாதத்தில் மனைவிக்கு 15 நாட்களையும், காதலிக்கு 15 நாட்களையும் பிரதிவாதி ஒதுக்க வேண்டும். பிரதிவாதியின் வீட்டில் மொத்தம் 3 அறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மனைவிக்கு ஒரு அறை, காதலிக்கு ஒரு அறை என ஒதுக்கித் தங்கிக் கொள்ள வேண்டும். நடுவில் உள்ள அறை பிரதிவாதிக்கானது. அதில் அவர் தங்கிக் கொள்ளலாம். இந்த நடு ரூமிலிருந்து மனைவியின் ரூமுக்கும், காதலியின் ரூமுக்கும் போய் வருவதற்கு வசதியாக கதவு வைத்துக் கொள்ள வேண்டும். 

பிரதிவாதியின் அசையும், அசையா சொத்துக்களில் அவரது மனைவிக்கும், காதலிக்கும் சம பங்கு உண்டு... இதுதான் நீதிபதியின் தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பில் 29 நாட்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் பிரதிவாதி எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும், 31 நாட்கள் வரும் மாதங்களில் அவர் எப்படி நாள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top