Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பிரிந்த காதலியுடன் மீண்டும் பேச..??

பிரிந்த காதலியுடன் மீண்டும் பேச..??

நாங்க ரெண்டு பெரும் நல்லாத்தான் பேசிட்டு இருந்தோம் ஆனா நா ஒரே ஒரு வார்த்தை கொஞ்சம் கோபம் வர்ற மாதிரி பேசிட்டேன் பட்டுன்னு கோச்சிகிட்டு போயிட்டா அதுக்கப்புறம் பலமுறை முயற்சி பண்ணியும் பேச முடியலை எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டும் சரிவரலை இப்படி நம்மிடையே உள்ள நண்பர்கள் அவர்களது காதலியை பற்றி சொல்வதுண்டு. 

உண்மையிலேயே நல்ல அன்னியோன்யம் இருந்தால் பேசுகின்ற வார்த்தைகளில் உள்ள சூடு தானாக தணிந்து பேச்சு இயல்பாகவே இரண்டு மூன்று நாட்களிலேயே திரும்ப ஆரம்பித்து விடும் இருந்தாலும் சில நேரங்களில் பிரிந்து போன உறவுகளை மீண்டும் தொடர்பு கொள்ள என்ன என்ன செய்யலாம். 

முதலில் அவர்களை அழைத்து பேச ஒரு ஆணித்தரமான காரணம் இருக்க வேண்டும். அந்த காரணம் அவர்களின் பழைய கசப்புணர்வை நீர்த்து போகசெய்ய வேண்டும். எது எப்படி இருந்தாலும் அவர்களது பிறந்த நாள், இல்லையென்றால் வேலையிலோ படிப்பிலோ குறிபிடத்தக்க முன்னேற்றம் இருந்தால் அப்போது வாழ்த்து தெரிவிக்கலாம். 

நீங்கள் இருவரும் பேசிகொண்டிருந்த சமயத்தில் அவர் முக்கியமான விஷயங்களை கேட்டு இருக்கலாம் அல்லது அதை செய்ய சொல்லி இருக்கலாம். அதை பற்றி தெரியபடுத்த மீண்டும் அழைக்கலாம். நீங்கள் உண்மையான இக்கட்டான சூழலில் இருக்கீறிர்கள் என்றால் குற்றமற்ற காரணங்களை கூறி உதவி கேட்கலாம். நீங்கள் செய்த செயல் உண்மையாகவே தவறானதாக இருந்தால் மனம் விட்டு மன்னிப்பு கோரி உறவை மறு பரிசீலனை செய்ய சொல்லலாம்.

நீங்களும் உங்களது வேலையிலோ அல்லது படிப்பிலோ நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தால் அதை தெரிவிக்கவும் நீங்கள் உங்களது காதலியை கூப்பிடலாம். பொதுவாக உணர்ச்சிகள் எப்போதும் மதிக்கதக்கவை அதை சரியான முறையில் வெளிப்படுத்தி உங்கள் மீதான நம்பகதன்மையை அதிகபடுத்துங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்....!

daytamil - ஞானிதாசன்



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top