Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


பென்சில் நுனியில் செதுக்கப்பட்ட சிற்பமா இது..??

பென்சில் நுனியில் சிற்பம்..?? இந்த மாணவியை மனதார வாழ்த்துங்க!.

சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தை சேர்ந்தவர் சிநேகா இவர் சாவி,கோப்பை, துப்பாக்கி உள்ளிட்ட பலவித சிற்பங்களை அழகாக பென்சிலின் கருப்பு முனையில் செய்கிறார் அப்படியா என்று ஆச்சர்யத்துடன் கேட்கத் தோன்றுகிறதா...!!

ஆமாம் அப்படியேதான் இவரது பெரியப்பா ஒரு நல்ல சிற்பக்கலைஞர். கல் மற்றும் களிமண்ணைக் கொண்டு இவர் உருவாக்கும் சிற்பங்களை கண்டு வியந்த சிநேகாவின் மனதிற்குள் தானும் அது போல சிற்பங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

ஆனால் எல்லோரையும் போல கல், மண் போன்றவைகளைக் கொண்டு அல்லாமல் வித்தியாசமாக சிற்பங்கள் உருவாக்க முடிவெடுத்தார். பிளஸ் டூ படித்த போது பென்சில், சாக்பீஸ், பல்பம் போன்றவைகளைக் கொண்டு சிற்பங்கள் செதுக்கினார். இதில் பென்சில் முனை சிற்பங்கள் இவருக்கு பராட்டினை பெற்று தந்திட தற்போது பென்சில் ஓவியராக வளர்ந்துள்ளார். 

சிற்பத்தை உருவாக்குவதற்கு சிற்பத்தின் நுட்பத்தைப் பொறுத்து மூன்று மணி நேரம் வரை ஆகுமாம்.இது வரை நூற்றுக்கும் அதிகமான பென்சில் சிற்பங்களை உருவாக்கியிரு கிறார்.ஒரு உருவத்தை பார்த்தால் அதை அப்படியே உருவாக்கும் அளவிற்கு தனது ஆற்றலை வளர்த்துள்ளார்....!

பென்சில் நுனியில் சிற்பம்..?? இந்த மாணவியை மனதார வாழ்த்துங்க!.

பென்சில் நுனியில் சிற்பம்..?? இந்த மாணவியை மனதார வாழ்த்துங்க!.

பென்சில் நுனியில் சிற்பம்..?? இந்த மாணவியை மனதார வாழ்த்துங்க!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top