Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மருத்துவமனை கேண்டீன் உணவில் பாம்பு.கேரளாவில் பரபரப்பு!.

மருத்துவமனை கேண்டீன் உணவில் இறந்த பாம்பு...கேரளாவில் பரபரப்பு!.

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை கேண்டீனில் விற்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் இறந்த பாம்புக்குட்டி ஒன்று கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் நலமில்லாத தன் மகனைச் சிக்கிச்சைக்காகச் சேர்த்திருந்த பெண்மணி ஒருவர் அங்குள்ள கேண்டீனில் உணவு வாங்கச் சென்றார். அந்தக் கேண்டீனில் விற்கப்பட்ட பச்சைப்பட்டாணி கறி பாக்கெட்டை வாங்கியுள்ளார் அவர். 

சாப்பிட நினைத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. உள்ளே ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடந்துள்ளது உணவில் பாம்புக்குட்டி கிடந்தது தொடர்பாக அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதற்குள் தகவலறிந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் கேண்டீன் முன்பாகக் கூடி போராட்டத்தில் குதித்தனர்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top