Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நடிகையுடன் உல்லாச வாழ்க்கை...பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்!.

இளம் நடிகையுடன் உல்லாச வாழ்க்கை...பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்!..

திருமண ஆசைகாட்டி ரூ.1 கோடி மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பு சொத்தை அபகரித்ததாக, சினிமா புதுமுக நடிகை அனுராதா மீது வேளச்சேரியை சேர்ந்த ஸ்ரீதரன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரில் ஸ்ரீதரன் கூறியிருப்பது:நான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறேன். என் மனைவி சாந்தி 2006 முதல் புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், 2009ல் எனது நண்பர் ராமலிங்கம் மூலம், சினிமா நடிகை அனுராதா எனக்கு அறிமுகமானார்.

முதலில் அவர் என்னிடம் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார். பின்னர் என் மனைவி நோயால் பாதிக்கப்பட்டதால் அனுராதாவிடம் நெருங்கி பழக ஆரம்பித்தேன். ஆழ்வார்பேட்டையில் உள்ள எனது அலுவலகத்தில் அவர் தினமும் என்னை சந்தித்து வந்தார். அதன் மூலம் அனுராதாவின் குடும்பத்தினரும் என்னிடம் நன்றாக பழகினார்கள். பின்னர் நாங்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று வந்தோம்.

இந்நிலையில் என் மனைவி சாந்தி 2010ல் அனுராதா மீது கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அனுராதாவுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அதிகரித்தது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தோம். என் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அனுராதா என்னை திருமணம் செய்வதாக ஆசைகாட்டியதால் நிறைய பணத்தை கொடுக்க ஆரம்பித்தேன்.

அனுராதா வில்லாபுரம் வம்புடன் வரவேற்கிறது, புடிச்சா புளியங்கொம்பு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது சம்பந்தமாக எனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது என அவர் கூறினார். நானும் அதை நம்பி என்னுடைய சொத்து மற்றும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன்.அவரை நம்பி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, மற்றும் பணத்தை கொடுத்துள்ளேன்.

இப்போது பணத்தை திரும்ப கேட்டால் தர முடியாது என கூறுவதுடன், ரவுடிகளை வைத்து என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top