Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தமிழின் பிரபல நடிகர்கள் எந்த இடங்களில் பிறந்தார்கள் தெரியுமா..?

தமிழின் பிரபல நடிகர்கள் எந்த இடங்களில் பிறந்தார்கள் தெரியுமா..?

தமிழின் டாப் 10 நடிகர்கள் எங்கு பிறந்தார்கள் என்று தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு ஆர்வம் இருக்கும். அந்த வகையில் சில திரைப்பட கதாநாயகர்களின் பிறந்த ஊரை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்....

ரஜினிகாந்த் 

பெங்களூர் 1950-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி குடும்பத்தின் கடைசி பிள்ளையாக பெங்களூர் நகரில் பிறந்தார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு அவருடைய பெற்றோர்கள் இட்ட பெயர் சிவாஜி ராவ் கேக்வாட் என்பதாகும். 

கமல்ஹாசன் 

பரமக்குடி உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நவம்பர் 7-ஆம் தேதி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போலவே கமல்ஹாசனும் தன் குடும்பத்தில் கடைசி குழந்தையாவார். 

அஜித் 

செகந்தராபாத் நடிப்பு, கார் ரேசிங், பைக் ரேசிங் எல்லாத்தையும் ஒரு கை பாத்த நம் தல அஜித் குமார் எங்க பொறந்தாரு தெரியுமா?...1971-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி ஹைதராபாத்தின் இரெட்டை நகரமாக கருதப்படும் செகந்தராபாத்த்தில்தான் நம்ம தல பொறந்தார். 

விஜய்

சென்னை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குனர் S.A. சந்திரசேகர் மற்றும் பாடகர் ஷோபா அவர்களுக்கும் மகனாக ஜூன் 22, 1974-ஆம் ஆண்டு பிறந்தார் நம்ம இளையதளபதி விஜய் அவர்கள். 

சூர்யா 

கோயம்புத்தூர் நம்ம சூர்யா எங்க பொறந்தாருன்னு தெரியுங்களா?...அட லொள்ளுக்கு பேர்போன நம்ம கோயம்புத்தூர்லதாங்க!...ஜூலை 23, 1975-ஆம் ஆண்டு பிறந்த சூர்யா அவர்களுக்கு அவர் தந்தை சிவக்குமார் இட்ட பெயர் சரவணன். 

மாதவன் 

ஜம்ஷெட்பூர் 'அலைபாயுதே' மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து, '3 இடியட்ஸ்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றதோடு நல்ல நடிகன் என்ற பெயரையும் வாங்கிய நம்ம மேடி மாதவன் பிறந்தது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூர் நகரத்தில். 

தனுஷ் 

சென்னை சூப்பர் ஸ்டார மட்டும் இல்லைங்க இப்ப அவரு மருமகன் தனுஷ் யாருன்னு கேட்டாக்கூட சின்ன குழந்தையும் சொல்லும்!..கொலைவெறி பாட்டு மூலமா உலகம் பூரா ஃபேமஸ் ஆன நம்ம தனுஷ் இப்ப ஹிந்தி சினிமால ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்காரு. தனுஷ் சினிமால சென்னை பாஷை சரளமா பேசறதுக்கு அவரு சென்னையில பொறந்தாருங்கறதும் ஒரு காரணம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top