பிரபல இங்கிலாந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அறுவை சிகிச்சையை முடித்தபிறகு நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பொறித்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிமோன் பிரம்ஹால் என்ற அந்த மருத்துவ நிபுணர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இவரது சக மருத்துவர்கள் கூறுகையில் சிமோன் பிரம்ஹால் இந்த துறையில் மிகவும் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர் ஆவார். சில தினங்களுக்கு முன்பு இவர் ஆபரேஷன் செய்த நோயாளி ஒருவரை பிற டாக்டர்கள் வழக்கமான செக் அப் செய்தனர். அப்போது அந்த நோயாளியின் கல்லீரலை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் எஸ்.பி என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
விசாரணை நடத்தியதில் இயந்திரங்களை ஒட்ட வைக்கும் ஆர்கன் என்ற வாயுவை கொண்டு இவர் மிகவும் நூதன முறையில் அந்த நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. கல்லீரல் என்ன இவர் எழுதும் ஆட்டோகிராப் புத்தகமா..? அல்லது அறுவை சிகிச்சை என்ன பிராண்ட் விளம்பரமா..? என டாக்டர்கள் கொதித்தனர்.
தற்போது துறைரீதியாக விசாரணை நடத்தி சிமோன் பிரம்ஹாலை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்து நாளேடுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது....!