Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -ராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..?

ராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..?

daytamil இணையம் வாசகர்களிடம் இருந்து கட்டுரைகளை daytamil இணையத்தில் பிரசுரிக்க வேண்டினோம் பல வாசகர்கள் தங்கள் கட்டுரைகளை சமூக விழ்ப்புணர்வு கட்டுரைகளை அனுப்பி உள்ளனர்...அக்கட்டுரைகளில் daytamil வாசகர் ஒருவர் ஆவி பற்றிய கட்டுரையை எழுதி அனுப்பி இருந்தார்

அக் கட்டுரை எங்களுக்கு வியப்பை அளித்தது ஏனெனில் சோழமன்னர் ராஜராஜ சோழனின் ஆவியுடன் அவரின் ஆசிரியர் பேசியதாகவும் அந்த நிகழ்வை எழுதி அனுப்பியுள்ளார் அவர் அனுப்பிய கட்டுரை விரிவாக கிழே காண்போம் .....

பேரரசர் ராஜ ராஜ சோழருடன் ஒரு பேட்டி.....

காற்றை கிழித்துக்கொண்டு இயந்திரப்பறவை மேலே பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் மனதை பின்னோக்கி செலுத்தி சற்று முந்தைய காலங்களின் மடியில் தவழ முயற்சி செய்வோம். நாகரீகம், பண்பாடு, கலாசாரம்,என்பன எல்லாம் சிதறுண்டு அங்கும் இங்குமாய் ஒட்டிக்கொண்டுள்ள இக்காலகட்டத்தில் அத்தகைய பொக்கிஷங்களை சிறிதளவாவது நினைவில் கொண்டு வந்து அவற்றின் மேன்மையை இன்று வரை நாமும் பேசி பாதுகாத்து வருவதில் அந்த காலத்து பேரரசர்களுக்கு பங்கு அதிகம் உண்டு.

அதிலும் தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் செயல்களை எண்ணி வியந்து சிந்தனை அலைகளை விரிய வைத்து கொண்டே செல்லலாம். எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்று பறக்கும் மனிதனின் சிந்தனைகளுக்கு சற்று புத்துணர்ச்சி அளிப்பதில் அருங்காட்சியகங்களுக்கும் முக்கிய இடம் உண்டு.

ராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..?
அந்த காலத்தால் அழியாமல் இருக்கும் கல்வெட்டுகள், அரண்மனைகள்,ஓவியங்களில் நமது பார்வையை செலுத்தி ஒவ்வொரு பொருளிலும் உள்ள கலை நுணுக்கத்தை ஆழ்ந்து ஊடுருவி ரசித்து கொண்டிருக்கும் போது நமது மனம் அந்த காலத்தில் பிறந்து வாழ்ந்திருக்க கூடாதா என்று ஏக்க பெருமூச்சை அங்கே பதிவு செய்து இருக்கும். இத்தகைய கலைப்பொருட்கள் எல்லாம் எப்படி கிடைத்தன ? எப்படி பயன் படுத்தி இருப்பார்கள் என்ற கேள்வியும் நம்முள் தோன்றுகிறது.

அப்படிப்பட்ட பொருட்களை உருவாக்கி மக்கள் நலம் பேணும் வகையில் செயற்கரிய செயல்களை செய்த பேரரசருடன் அமானுஷ்ய உலக தொடர்பு மூலம் பேசலாம் என்று தீர்மானித்த எங்கள் ஆசிரியர் வழிகாட்டும் தேவதைகளிடம் அனுமதி கேட்டார் . உயர்ந்த நிலையில் இருக்கும் அத்தகைய புண்ணிய ஆத்மாக்களான அவர்கள் விருப்பட்டு சம்மதித்தால் நீங்கள் பேசலாம் என்று சொன்னார்கள்.

நாங்களும் அவர்கள் கூறிய படி செய்து மீண்டும் அனுமதி கேட்டோம் அப்போது தேவதை எங்களிடம் மிகப்பெரிய பேரரசரும் மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவரும், இறைவனின் திருவருள் நிரம்ப பெற்றவருமான உயர்ந்த நிலையில் உள்ள புண்ணிய லோக ஆத்மாவான அருண்மொழித்தேவன் என்கிற ஸ்ரீ ராச ராச சோழன் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

அமானுஷ்ய தொடர்பில் நீண்ட அனுபவம் பெற்ற எங்கள் ஆசிரியர் மயக்க நிலை பேச்சின் மூலமாக பேரரசரை அழைத்தார். அவர் உடலில் இறங்கிய அரசர் எனது அருமை சகோதரர்களே உங்களுக்கு இந்த சோழ பேரரசரின் ஆசிகள். எதற்காக என்னை அழைத்தீர்கள் என்று கணீரென்ற குரலுடன் பேச ஆரம்பித்தார்.

என்னுடைய தோள்கள் தினவெடுக்கின்றன மீண்டும் இப்புண்ணிய பூமியில் பிறப்பதற்கு. 

தமிழகத்தின் உயிர் நாடி தமிழ் மக்கள், தமிழ் மொழி. தமிழ் மொழியை வளர்ப்பதும் ஒரு அரசனின் கடமை. ஆனால் இன்று தமிழகமும் தமிழும் மக்களும் நிலவு போல் தேய்ந்து விட்டார்கள் அதற்கு காரணம் என்ன மொழி வளத்தை பற்றி பேசியவர்கள் அந்த மொழியை பேசுகின்ற மனித வளத்தை புறக்கணித்துவிட்டனர்.

ஒரு மொழியும் பண்பாடும் வளர வேண்டும் என்றால் கொற்கை முத்து பாதுகாக்கபடுவது போல் மனிதனும் மனிதமும் பாதுகாக்க பட வேண்டும். அது இன்று இல்லை சிங்களம் புட்பகம் சாவகம் என பரந்து விரிந்து இருந்த எனது தாய் இன்று நலிந்து மெலிந்து கிடக்கிறாள் என்றால் பாலறுந்த வெண்டிய மார்பகத்தை கிழித்து குதறிய இன்றைய தமிழ் குழந்தைகள் தான் காரணம்.

அணுவிலும் அணுவாகவும் எல்லா உயிர்களிடத்திலும் நிறைந்துள்ள பெருவுடையார் மீது ஆணையிட்டு இதை சொல்கிறேன். நான் கூறப்போகும் செய்திகளை கவனமாக கேளுங்கள். மொழிக்கு மட்டுமல்லாது மக்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக்கொண்ட பெருமை பழங்கால தமிழரை சாரும் அதன் படியே எப்போதும் வாழ்ந்து இறைவனின் திருவருளை பெற முயற்சி செய்யுங்கள்.

கேள்வி: ஐயா மிகப்பெரிய சிவ பக்தரான நீங்கள் இறை வழிபாட்டு முறையை பற்றி கூறுங்கள்.

சோழப்பேரரசர்:கடவுளுக்கு என்றைக்குமே அஞ்ச வேண்டியதில்லை அவரிடத்தில் ஈடுபாடு கொண்டு அகங்குழைத்து நெஞ்சமாகிய திரையில் அவனை பற்றிய சிந்தனைகளை எப்போதும் அழியாமல் தீட்டி வைத்து நான் என்னும் செருக்கை அறுக்கும் போது கடவுளின் திருவருள் தானாக வந்தெய்தும்.

கேள்வி: அப்போதைய சிற்பக்கலைஞர்களின் கைத்திறனையும் பேரரசரின் சிவத்தொண்டையும் உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிய தஞ்சை பெரிய கோவிலை பற்றி கூறுங்கள்

சோழப்பேரரசர்: பெருவுடையார் கோயிலைப்பற்றி வினவுகிறீர்களா சோழர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் செங்கற்றளியாக இருந்த கோவில்கள் கருங்கற்றளிகளாக வடிவெடுக்க ஆரம்பித்தன அந்த நாளில் பல்லவ மன்னர்கள் காஞ்சி மாமல்லபுரம் போன்ற ஊர்களில் ஆயன சிற்பி எடுப்பித்த கற்றளிகள் எங்கும் பிரசித்தியாக இருந்தது. அதைப் போலவும் இன்னும் சிறப்பு மிக்கதாகவும் ஒரு திருக்கோயிலை சோழ நாட்டில் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கல்லே இல்லாத ஊரில் கற்கோவிலா என்று எல்லாரும் கேட்க நாடு முழுவதிலும் இருந்து கல் வரும் என்று பறைசாற்றுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டது. காஞ்சி மாமல்லபுரம் ஊர்களில் இருந்து வந்திருந்த கைத்திறனும் மதிநுட்பமும் கொண்ட சிற்பிகள் தூர தூர இடங்களுக்கு சென்று வேண்டிய கல்லை சோதித்து தேர்ந்தெடுத்து வெட்டி அனுப்பினர்.

ராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..?
கொல்லிமலை ஆனைமலை நீலமலை போன்ற பகுதிகளிலும் நர்மதை ஆற்றின் படுகைகளிலும் இருந்து கற்கள் கொண்டு வரவழைக்கப்பட்டன. கோவில் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் அதற்கு பெரிய மதில் வேண்டும் உள்ளே விசாலமான முற்றம் இருக்க வேண்டும் கருவறையில் அமையக்கூடிய லிங்கம் பெரியதாக இருக்க வேண்டும் என எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக செய்ய நினைத்த போது இறைவன் முன் அமர்த்தும் நந்தியையும் மிக பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு ஊற்றுக்கண்ணாக இருந்தது இலங்காபுரியில் ஸ்ரீ விஜயன் ஏற்படுத்திய புத்த விகாரங்கள் தான் என் மனதில் பதிந்திருந்தது. அத்தகைய புத்த விகாரங்களுக்கு இணையாக பெருவுடையப்பனை ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது கற்களை சேகரித்து செதுக்கி உரிய கருவிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பூர்வாங்க வேலைகளுக்கு மூன்று ஆண்டுகள் ஆயின ஏறத்தாழ ஏழு ஆண்டு காலம் கட்டு வேலை தொடர்ந்து நடந்தது.

நிழல் விழா கோபுரம் ஒரே கல்லினால் ஆன பிரம்மாண்ட நந்தி கருவறை மீது கோபுரமுடைய கோவில் என்றெல்லாம் சிறப்புமிக்க இந்த கோவிலில் பெருவுடை ஈசனை ஸ்தாபிதம் செய்து லிங்க பந்தனம் செய்தவர் கருவூர் தேவர் என்கிற சித்தர். கோபுரம் எண்பட்டை வடிவத்தில் பதிமூன்று மாடங்களுடன் நிமிர்ந்து மேலே ஒரே கல்லால் மூடப்பட்டுள்ளது.

இத்திருக்கோவிலின் மேன்மை எல்லோருக்கும் தெரிய காரணமாக இருந்தது இறைவனின் திருவருளும் கருவூராரின் தவ சக்தியும் தான் இறைவனின் கையசைப்புக்கு உட்பட்டு செய்த ஒரு சிறு செயல் தான் இவைகள். நாங்கள் சிறு கருவிகள் தான் இன்னும் அண்டசராசரங்களில் எத்தனையோ மகிழ்ச்சியான விஷயங்கள் உள்ளன அதில் ஒரு சிறிய நிகழ்வு தான் இந்த கோவில்கள்.

கேள்வி: கலைகளின் மீது ஆர்வம் அதிகமாக அரசர்களுக்கு இருக்குமல்லவா?

சோழப்பேரரசர் : மக்கள் பயின்று வந்த கலைகள் அறுபத்தி நான்கு வகையாக தொகுக்கப்பட்டு இருந்தது கைவல்லர்கள் எனப்படும் ஓவியர்கள் ஓவியம் எழுதி அதற்கு கண் திறப்பர். மண்டபங்களின் சுவர் மேல் யானை மான் போன்ற விலங்குகளின் உருவங்களும் தாமரை குளம் ஆகியவற்றின் உருவங்களும் எழுதப்பெற்றன

ஊசியை மையில் தோய்த்து ஓலையின் மேல் பிறர் கண்ணில் படாதவாறு எழுத்தை மறைத்து எழுதுவதும்

ராஜ ராஜ சோழரின் ஆவி சொன்ன பழந்தமிழனின் வெற்றி ரகசியம்..?யானைப்போரின் நுணுக்கங்களை கற்பதும் எங்களது காலங்களில் இருந்த அபூர்வ கலைகளில் சில.....

தொலை தூரத்தில் இருப்பவர்களை இருந்த இடத்தில் இருந்தே காணக்கூடிய மதிமுகம் என்பது போன்ற கலையை பயில்வதிலும்

வானத்தில் பறப்பதற்கு உதவிய ஆகாசகாமினி என்கிற மந்திரத்தை ஓதுவதையும் மக்கள் கற்று கொண்ட கலைகள்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தற்போது பயன்பட்டு வரும் ஓலையின் மேல் எழுதி பின்பு அதன் மேல் அரக்கு வைத்து குண்டலத்தால் முத்திரையிடும் வழக்கமும் அப்போது உருவாக்கப்பட்ட ஒன்று.

கேள்வி: தமிழ் மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை ஐயா

சோழப்பேரரசர்:இறைவன் தனித்து நிற்கிறான் உயிர்களிடத்திலும் உயிரில்லாத சடப்பொருளிலும் காணப்படுகிறான் இந்த மூன்று நிலைகளிலும் இறைவன் வேறாகவும் ஒன்றாகவும் உடனாகவும் உறையும் நிலைகளாகும் இந்த தத்துவத்தை பின்பற்றி ஒவ்வொரு ஆத்மாவும் இதை உணரும் வரை பிறவிகளை எடுக்கவேண்டியுள்ளது. உணர்ந்தவன் யோகியாகிறான் அதனை அறிய முயற்சியை மேற்கொண்டு சத்தியமான பாதையில் வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்.

கேள்வி:இன்றைய தமிழர்களின் நல்வாழ்வுக்கு தாங்கள் கூற விரும்பும் கருத்து

சோழப்பேரரசர் : பழமை என்கிற அஸ்திவாரத்தின் மீது நவீனம் என்கிற பாசறையை எழுப்புங்கள் அரச சொத்துக்கள் நம்முடையது என்று பாதுகாக்கவும் பெருக்கவும் முற்படுங்கள் மாதர்களை இழிவுபடுத்தும் நாடு சாம்பல் மேடாகும் என்பதை மறவாதீர்கள்

கற்பொழுக்கம் இல்லாத கண்ணியரும் காளையரும் மனித இனமே அல்ல என்பதை மறவாதீர்கள். பேரரசர் புறப்படும் நேரம் வந்துவிட்டது ஆசிரியர் மயக்க நிலையில் இருந்து விழித்து பார்க்கிறார். நாங்களும் பேரரசரை வணங்கினோம். பேரரசர் கூறிய ஆன்மீக நல்லொழுக்க கருத்துக்கள் எங்கள் மனம் முழுக்க நிரம்பியது.....!

இக்கட்டுரையை எழுதி அனுப்பியவர்

daytamil வாசகர் ஞானிதாசன் ....உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top