Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



போலீஸ் அதிகாரிக்கு நடுரோட்டில் முத்தமிட்ட மாணவியால் பரபரப்பு!.

போலீஸ் அதிகாரிக்கு நடுரோட்டில் முத்தமிட்ட மாணவி மீது செக்ஸ் புகார்!.

இத்தாலியில் போலீஸ் அதிகாரியை முத்தமிட்ட மாணவி மீது செக்ஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் மிலன் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அதிவேக ரெயில் விடப்படுகிறது. அதற்காக இருப்புபாதை (தண்டவாளம்) அமைக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். 

அதில் மாணவி நீனா டி என்பவரும் பங்கேற்றார். அப்போது அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சால்வடோர் பிசியோன் என்பவரை முத்தமிட்டார். முகத்தை மூடியபடி ஹெல்மட்டுடன் இருந்த அவரை முத்தமிட்ட போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரியை முத்தமிட்ட மாணவி நீனா மீது செக்ஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை இழிவுப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது....!

போலீஸ் அதிகாரிக்கு நடுரோட்டில் முத்தமிட்ட மாணவி மீது செக்ஸ் புகார்!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top