Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உயிரைப் பறிக்கும் விளையாட்டு மைதானம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.?

உயிரைப் பறிக்க அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.?

விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் உயிரிழப்பது என்பது அடிக்கடி நடப்பது. ஆனால் உயிரைப் பறிப்பதற்காகவே அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?. அதற்கு பெயர்தான் கொலோசியம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் கோலாச்சிய ரோம் சாம்ராஜ்யத்தில்தான் இது கட்டப்பட்டது. 

இது எதற்காக கட்டப்பட்டது என்பது குறித்த தெளிவான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஆனாலும் கட்டட அமைப்பு கட்டப்பட்டுள்ள விதம் ஆகியவை, இது ஒரு மாபெரும் விளையாட்டு மைதானம் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கிறது. ஃபிளாவியன் வம்சத்தைச் சேர்ந்த வெஸ்பாஸியன் என்ற மன்னர் இந்த கொலோசியத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். 

இது நடந்தது கி.பி. 72ம் ஆண்டு. கொலோசியம் கட்டி முடிக்கப்பட்டது 80ம் ஆண்டு. கட்டி முடிக்கப்பட்டதும்தான் தெரிந்தது ஒட்டு மொத்த கொலோசியமும் சாய்வாக கட்டப்பட்டுள்ளது என்று. இதற்கு கொலோசியம் என்ற பெயரைச் சூட்டியவர் புகழ் பெற்ற நீரோ மன்னன். 188 மீட்டர் சுற்றளவும், 156 மீட்டர் குறுக்களவும் கொண்ட இந்தக் கொலோசியம் 48 மீட்டர் உயரம் கொண்டது. 

ஆங்காங்கே பெரும் சிற்பங்கள் வேறு வைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க மார்பிள் கற்களால் கட்டப்பட்டது இந்தக் கொலோசியம் என்பது வியப்பின் உச்சம். இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்று தெரியுமா..? ஒரே நேரத்தில் சுமார் 55 ஆயிரம் பார்வையாளர்கள் இங்கு அமரலாம் என்பதுதான். மேற்பகுதியில் ஆண்களும் கீழ்பகுதியில் பெண்களும் அமர்ந்து இங்கு நடந்த போட்டிகளை ரசித்துள்ளனர் என்று வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. 

அது சரி இங்கு என்ன மாதிரியான போட்டிகள் நடந்திருக்கும் என்பதற்கு சில சரித்திர சான்றுகளே சிக்கியுள்ளன. பெரிய அளவிலான காட்டுப் பன்றிகளை இந்த மைதானத்தினுள் ஓட விடுவார்கள். அதனை வெறும் கையால் அடக்கவேண்டும். இதில் காட்டுப் பன்றியின் கூரிய பற்களால் குத்திக் கிழிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் நிறைய. 

அதேபோல் குழு விளையாட்டுக்கள் என்று எடுத்துக் கொண்டால் மதம் கொண்ட யானை மைதானத்திற்குள் விடப்படும். அதனை வென்றாக வேண்டும். மனிதன் வெற்றி பெற்றால் வெகுமதி பரிசு. தோற்றாலும் வெகுமதி உண்டு. அதற்கு பெயர் மரணம். பெரும்பாலும் எகிப்து மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பிடித்து வரப்பட்ட அடிமைகள்தான் இந்த விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர். 

சில சமயம் கொடூரமான பசியில் இருக்கும் புலியை வெற்றி கொள்ளவேண்டும். வெற்றி பெற்ற அடிமைகள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று நினைத்தீர்களா…? அதுதான் இல்லை. அவரின் வீர தீரத்துக்குப் பரிசாக மற்றொரு பெரிய செல்வந்தரிடம் விற்கப்படுவார். ஆக மொத்தம் அடிமைகள் அடிமைகள்தான். இவர்களைத் தவிர குற்றம் புரிந்து சிறையில் உள்ளவர்களையும் வீர விளையாட்டுக்களில் அனுமதித்துள்ளனர். 

மரண தண்டனைக் கைதிகள் புலியுடன் மோதுவார். வென்றால் ஆயுள் தண்டனையாக மாற்றப்படும். தோற்றால் புலிக்கு அன்றைக்கு சைடு டிஷ் இவர்தான். நாளைடைவில் ஏற்பட்ட மாற்றங்கள், போர்கள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றில் சிக்கி இந்தக் கொலோசியத்தின் பாதிப் பகுதி அழிந்து போனது. மீதமுள்ள பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இதனை பார்த்துச் செல்கின்றனர்......!

உயிரைப் பறிக்க அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.?

உயிரைப் பறிக்க அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.?

உயிரைப் பறிக்க அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.?

உயிரைப் பறிக்க அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top