Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியது போது அவர் அறையில் இருந்த பிரபல நடிகர்..?

ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியது போது அவர் அறையில் இருந்த பிரபல நடிகர்..?

நடிகை ஸ்ருதிஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம மனிதன் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஸ்ருதிஹாஸன் இதுபற்றி போலீசில் புகார் செய்யாதது ஏன் என்றும் போலீசார் கேட்டுள்ளனர்.நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.இந்தியில் அறிமுகமான அவர் இந்தி படத்திலும், ‘குர்ராம்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் வசித்து வருகிறார். வழக்கம்போல் அவர் படப்பிடிப்புக்கு போய்விட்டு வீடு திரும்பினார். களைப்பு காரணமாக அவர் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு, தூங்குவதற்கு போனார்.அவர் தூங்க ஆரம்பித்தபோது அவருடைய வீட்டு கதவு தட்டப்பட்டது. 

உடனே ஸ்ருதி ஹாசன் படுக்கையை விட்டு எழுந்து வந்து, கதவை திறந்தார். வெளியில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம மனிதன் நின்று கொண்டிருந்தான். ஆனால் ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே சில முறை பார்த்த முகம்தான் அவன்.ஸ்ருதி ஹாசன் கதவை திறந்ததும் அவரை, அந்த மர்ம மனிதன் பாய்ந்து தாக்கினான். ஸ்ருதியை பலவந்தமாக இழுத்து அணைத்து, கழுத்தைப் பிடித்து நெறித்தான். 

அவனை ஸ்ருதி ஹாசன் பலமாக பிடித்து தள்ளிக் கொண்டே, ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தினார்.அவரது குரலை கேட்டதும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். மர்ம மனிதனை பலவந்தமாக அங்கிருந்து இழுத்துச் சென்றனர். அவனும் அவர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடினான்.

ஸ்ருதி ஹாசன் தாக்கப்பட்ட சம்பவம், மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஸ்ருதி ஹாஸனை அந்த மர்ம மனிதன் வீட்டில் தாக்கியபோது, ஸ்ருதிஹாஸனின் உடன் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், அதனால்தான் போலீசில் ஸ்ருதியால் புகார் தர முடியவில்லை என்றும் மும்பை மீடியாவில் செய்தி வெளியாகியுள்ளது.

யார் அந்த நடிகர் என்பதும் மர்மமாக உள்ளது. ஸ்ருதிஹாஸன் இசைக்குழு நடத்திக் கொண்டிருந்தபோதே அவருக்கு மும்பையில் ஒரு நெருக்கமான ஆண் நண்பர் இருந்ததாகவும் கூறுவார்கள்.இந்த சம்பவம் பற்றி ஸ்ருதி ஹாசனிடம் விசாரிப்பதற்காக அவரை போனில் தொடர்பு கொள்ள பலரும் முயன்றனர்.அவர்களிடம் 'சுருதி பதற்றத்தில் இருக்கிறார். அவர் இப்போதைக்கு ‘மீடியா'விடம் பேச விரும்பவில்லை' என்று அவருடைய செயலாளர் பதிலளித்தார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top