Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -தி கிரேட் காளி..'' இந்திய மல்லனின் முழு வரலாறு தெரியுமா..?

''தி கிரேட் காளி '' இந்திய மல்லனின் முழு வரலாறு தெரியுமா..?

ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் தி கிரேட் காளி . இவரது பெயர் தலீப் சிங் ராணா (Dalip Singh Rana). சிம்லாவில் இருந்து, வெகு தூரத்தில் உள்ள கிராய்னா என்ற குக்கிராமத்தில் எட்டு பேர் கொண்ட ஏழைக் குடும்பத்தில் 27 ஆகஸ்ட் 1972 -ல் பிறந்தவர் ராணா . இவரது உயரம் 7 அடி 2½ அங்குலங்கள், இப்பொழுது இவரது எடை 805 பவுண்டுகள். 

படிப்பில் ஆர்வம் காட்டவில்லை, காரணம், (வேறென்ன..) படிப்பு ஏறவில்லை. இதனால் தன் படிப்பை பாதியில் நிறுத்தி மலையில் பாறைகள் உடைக்கும் கூலி வேலைக்கு செல்ல நேர்ந்தது. ரயில்வே போர்ட்டராகவும் வேலை செய்தார். ராட்சத உடல்வாகுடைய ராணா மல்யுத்த பயிற்சி பெற்றார். உள்ளூர்களில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றார். 

1993 ம் ஆண்டு, சிம்லாவில் ஒரு ஓட்டலில் காவலாளியாக சேர்ந்தார். ஓட்டலில் தங்கிய பஞ்சாப் டி.ஜி.பி., இவரின் உயரம், வலுவான உடலை பார்த்து அசந்து போய், அவருக்கு உடனே போலீஸ் வேலை தந்தார். ஜலந்தரில் காவலராகப் பணியமர்த்தப்பட்ட ராணா  மல்யுத்தப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். 1995 - 96ல், தொடர்ந்து "மிஸ்டர் இண்டியா' பட்டத்தை பெற்றார். 

அதன் பின்னர் போலீஸ் அதிகாரிகள், மல்யுத்த நிர்வாகிகள் சிலர் உதவியுடன், அமெரிக்காவில் உள்ள மல்யுத்த பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். பயிற்சி முடித்ததும், ஜப்பானில் உள்ள மல்யுத்த சங்கத்தில் வீரரானார். அமெரிக்காவின் பிரபலமான வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின் மென்ட் அமைப்பை சேர்ந்தவர்கள், ராணாவின் அசாத்திய உடல்வாகு, மல்யுத்தத்திறனை பார்த்து தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டனர். 

உலகம் முழுவதும் பல "டிவி' சேனல்களில், மல்யுத்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளில், "கிரேட் காளி' என்ற பெயருடன் வலம் வருகிறார் தலிப் சிங் ராணா. இப்பொழுது இந்தியர்கள் அனைவருக்கும் WWF என்றாலே நினைவில் வருபவர் காளிதான்! வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட்டில் இவர், மேடையில் 16 பேரை ஒரே சமயத்தில் தூக்கி கீழே போட்டு சாகசம் செய்த காட்சிகள் , இவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. 

இவர் தன் பிறந்த கிராமமான கிராய்னாவிற்கு வருகை தந்தபொழுது அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் அவரது குடும்பம் ஒரே அறை கொண்ட வீட்டில்தான் வசித்து வந்தது. WWF -ல் புகழ் மூலம் கிடைத்த பணத்தில் பல லட்சங்கள் செலவில் இவர் தன் கிராமத்தில் பங்களா கட்டியுள்ளார்.

இந்த பங்களாவில் அறைகளின் உயரம் 12 அடிகள். ராணா தங்குவதற்கு 25 க்கு 40 அடி அறை கட்டப்பட்டுள்ளது. இவரது ஒரு நாள் சாப்பாடு ஐந்து சிக்கன், 24 முட்டைகள், மட்டன், கணக்கில் அடங்காத ரோட்டி மற்றும் பரோட்டாக்கள். அடிமட்ட ஏழையாகப் பிறந்தவரான ராணா இன்று தன் திறமையால் பெரும் செல்வந்தராகத் திகழ்கிறார்.

மும்பையில் தனியார் சேனல் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரிடம் நீங்கள் யாருக்குமே பயப்பட மாட்டீர்கள்தானே எனக் கேட்கப்பட்ட பொழுது, ஏன் பயப்பட மாட்டேன்... "நான் கடவுளுக்குப் பயப்படுவேன்' எனக் கூறி அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும் அவர் கூறுகையில் நான் எனக்காக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. நாட்டுக்காகவே இப்போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.

என்னைப் போல வாலிபர்கள் பலர் இப்போட்டியில் பங்கேற்றால் மகிழ்ச்சி அடைவேன். இளைஞர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். போதைப் பொருள் பழக்கங்களைக் கைவிட்டு நல்ல முறையில் வாழ்ந்து குடும்பத்திற்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும் என்றார்.இந்தியாவிலிருந்து இதுவரை WWF போட்டியில் பங்கேற்ற ஒரே நபர் தி கிரேட் காளி என்பது குறிப்பிடத்தக்கது...!தி கிரேட் காளி..'' இந்திய மல்லனின் முழு வரலாறு தெரியுமா..?

தி கிரேட் காளி..'' இந்திய மல்லனின் முழு வரலாறு தெரியுமா..?

தி கிரேட் காளி..'' இந்திய மல்லனின் முழு வரலாறு தெரியுமா..?

''தி கிரேட் காளி '' இந்திய மல்லனின் முழு வரலாறு தெரியுமா..?

''தி கிரேட் காளி '' இந்திய மல்லனின் முழு வரலாறு தெரியுமா..?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top