Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வாலிபருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பெண்..இந்திய ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லையா..?

வாலிபருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பெண்..இந்தியாவில் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லையா..?

கற்பழிப்புகளுக்கு பேர் போன தலை நகர் டெல்லியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வினோத வக்கிர சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது, அதிர்ச்சியளிக்கக்கூடியது. டெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் வசித்து வரும் பெண் ரேணு. இவர் சில நாட்களுக்கு முன்பு வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார். 

ஆனால் இந்த வாஷிங் மெஷின் பிரச்சனை கொடுத்துள்ளது. பானாசோனிக் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை பார்க்கும் ஜஸ்விந்தர் சிங் (34) என்பவர் இந்த பிரச்சனையை தீர்க்க ரேணு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர் ரேணுவின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு சீமா என்ற மற்றொரு பெண் இருந்துள்ளார். 

ரேணு ஜஸ்விந்தர் சிங்கிடம் மற்றொரு பெண்ணான சீமாவுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் அதற்கு பணம் தரவும் அவரை ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த மெக்கானிக் அதெல்லாம் முடியாது என்று கடுமையாக மறுத்துள்ளார். இந்த தருணத்தில்தான் மாடியில் காய வைத்த துணிகளை எடுக்க ரேணு சென்றுள்ளார். 

ஏற்கனவே ரேணுவின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இந்த மெக்கானிக். ஆனால் ரேணு விடுவதாக இல்லை. அப்போது இரண்டு முரட்டு உருவம் கையில் லட்டியுடன் அங்கு வந்துள்ளனர். இவர்கள் மெக்கானிக் ஜஸ்விந்தர் சிங்கை அடித்து உதைத்து அவர் ஆடைகளை களைந்துள்ளனர். 

அப்போது விறுவிறுவென்று நிர்வாணப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அப்போது ரேணு ஜஸ்விந்தர் ஆடைகளிலிருந்து பணம், சில பல ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்து கொண்டார். தான் கூறியபடி செக்ஸ் வைத்துக் கொண்டு பணம் கொடுக்காவிட்டால் கற்பழிப்பு புகார் கொடுத்து விடுவேன் என்று மெக்கானிக் ஜஸ்விந்தர் சிங்கை ரேணு மிரட்டவும், கடும் அதிர்ச்சியடைந்தார் ஜஸ்விந்தர். 

அடி உதை தாங்கமுடியாத மெக்கானிக் தான் ஏ.டி.எம்.-இல் போய் பணம் எடுத்து வருகிறேன் என்று எதை எதையோ கூறி ஒருவழியாக ரேணுகாவிடமிருந்து தப்பி வெளியே வந்து போலீஸ் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு ரேணு என்ற அந்த பலே பெண் கைது செய்யப்பட்டுள்ளார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top