Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சச்சினுக்கு பாரத ரத்னா ஏன் கொடுக்க கூடாது தெரியுமா..? (பகீர் உண்மை)

சச்சினுக்கு பாரத ரத்னா ஏன் கொடுக்க கூடாது தெரியுமா..? (பகீர் உண்மை)

தலைப்பில் உள்ளதுபோல் கேள்வி கேட்டு கட்டுரை எழுதினால் சச்சின் பக்தர்கள் நம்மை உரித்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும்! ஆனால் உண்மை, வெறியை விட வித்தியாசமானது. அவரது இந்திய தேச பக்தி, நாட்டுப்பற்று இவையெல்லாம் குறை கூற இடமில்லை என்றாலும், பாரத ரத்னாவுக்கு அவர் எந்த அடிப்படையில் தகுதியற்றவர் என்பதை பார்ப்போம்!

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக கடந்த 24 ஆண்டுகள் விளையாடி யுள்ளார். சரிதானே! ஆனால் இது தவறு. டெக்னிக்கலாக அவர் பிசிசிஐ-யிற்குத்தான் விளையாடியுள்ளார். பிசிசிஐ-யைத்தான் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே தன்னை பல முறை தன்னை தனியார் அமைப்பு என்றே அங்கீகரித்துள்ளது. 

மேலும் பிசிசிஐ தமிழ்நாடு சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருவதல்ல. இதனால் அதன் செயல்பாடுகளுக்கு பொதுமக்களிடத்தில் பதில் கூற வேண்டியத் தேவையில்லை. எனவே சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக விளையாடினாலும், டெக்னிக்கலாக கூறவேண்டுமெனில் அவர் இந்தியாவுக்கு விளையாடவில்லை என்றே கூறவேண்டும். 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ரூ.2 கோடி வருமான வரியை தவிர்க்க அவர் தனது தொழில் விளம்பரத்தில் நடிப்பதே என்று வெளிப்படையாக கூறினார். இ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பெப்சி அன்ட் கோ ஆகியவற்றின் மூலம் ரூபாய் 5 கோடியே, 92 லட்சத்து 31 ஆயிரத்து 211 சம்பாதித்தார். அதற்காக அவருக்கு ரூ.2,08,59,707 வருமான வரி விதிக்கப்பட்டது. இந்த வருமான வரி கட்ட வேண்டிய உத்தரவை சச்சின் சாலஞ்ச் செய்தார். 

அப்போது அதை விசாரித்த நீதிபதிகள் குழு சச்சின் ஒரு கலைஞர் மாடெலிங் அவரது தொழில் எனவே அவர் வருவாய்களில் விலக்குகள் கொடுக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது. வருமானவரிச் சட்டம் 80RR - இன் படி கலைஞர்களுக்கு வருமான வரியில் சலுகைகள் உண்டு. சச்சின் அந்த அடிப்படையில் 2 கோடி வரிவிதிப்பில் சலுகைகளைப் பெற்றார். 

வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி சச்சினிடம் உங்கள் தொழில் என்ன என்று கேட்டதற்கு அவர் "நான் ஒரு பிரபல மாடல், பல்வேறு நிறுவனங்களின் வர்த்த்கப் பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறேன்" என்று எழுதிக் கொடுத்துள்ளார். 

இதுபோன்ற விளம்பர வருவாயை சச்சின் "வர்த்தகம் மற்றும் தொழில்" மூலம் வந்த வருவாயாகவும், கிரிக்கெட் ஆடி சம்பாதித்த பணத்தை 'பிற ஆதாரங்களிலிருந்து வந்த வருவாய்' என்றும் பிரித்துக் காட்டினார். அதாவது தான் தொழில் பூர்வமாக கிரிக்கெட் வீரர் அல்ல. ஒரு மாடல் என்று சச்சினே ஒப்புக் கொண்டுள்ளார். ...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top