Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இன்று இரவு வானில் தெரியும் அதிசய வால்நட்சத்திரம் காணத்தவறாதீர்!.

இன்று இரவு வானில் தெரியும் அதிசய வால்நட்சத்திரம்..காணத்தவறாதீர்!.

உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது. உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. 

ஐசான் என்னாகப் போகிறது சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது. படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. 

அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு மிக மிக அருகே இன்று போகும் காட்சியை நேரடியாக தொலைநோக்கிகள் மூலம் காண சோஹோ என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்துள்ளது. 

சோஹோ மூலம் கிடைக்கும் வீடியோ காட்சிகளை நாம் காணவும் நாசா ஏற்பாடு செய்துள்ளது. http://sohowww.nascom.nasa.gov/home.html இங்கே போனால் அதைப் பார்க்கலாம்.

இந்த ஐசான் வால் நட்சத்திரம் நவ. 28, 29 ஆம் தேதிகளில் எளிதாகப் பார்க்கக்கூடிய விதத்தில் காலை, மாலை இரு வேளைகளிலும் வானத்தை அலங்கரிக்கும். இது சூரியனின் சக்தி வாய்ந்த கதிர் வீச்சால் சுருங்கி விடாமலிருந்தால் டிசம்பர் மாதம் முழுவதும் தனது பயணத்தைத் தொடரும். 

இதை நேரடியாக பார்க்கக்கூடாது கைகளாலோ, அட்டையிலோ சூரியனை மறைத்துவிட்டோ அல்லது ஒரு கட்டடத்தின் பின்புறம் சூரியன் இருக்கும்படி நின்று கொண்டு பார்க்கலாம். இதனால், யாருக்கும் ஆபத்து இல்லை...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top