Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


வரும் நவம்பர் 29-ல் விண்ணில் தெரியும் அதிசயம் காணதவறாதீர்!.

வரும் நவம்பர் 29-ல் விண்ணில் தெரியும் அதிசயம்..காணதவறாதீர்!.

இந்த நூற்றாண்டின் மிகப்பிரகாசமான ஐசான் வால்நட்சத்திரம் வரும் 28-ஆம் தேதி சூரியனை மிக அருகே கடக்க உள்ளது. அதற்கடுத்த நாளான நவம்பர் 29-ஆம் தேதியன்று மாலை 5 மணி முதல் சூரியன் மறையும் வரை இந்த வால்நட்சத்திரம் மிகப் பிரகாசமாக, நீண்ட வாலுடன் வானில் காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

ஐசான் வால்நட்சத்திரத்தை நவம்பர்,டிசம்பர் மாதங்களில் வெறும் கண்களுக்குத் தெரியும். விடியற்காலையில் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்னர் கிழக்கு திசையில் இந்த வால்நட்சத்திரத்தை காணலாம். டிசம்பர் மாதத்தில் சூரிய உதயத்துக்கு முன்பும், சூரியன் மறைவுக்குப் பிறகும் பார்க்கலாம். அந்த மாத கடைசியில் இரவு முழுவதும் பார்த்து ரசிக்கலாம்..

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விட்டாலி நெவஸ்கி மற்றும் ஆர்டியோம் நோவிச் சோனாக் ஆகிய விஞ்ஞானிகள் இந்த ஐசான் வால்நட்சத்திரத்தை 2012-ம் ஆண்டு செப்டம்பர் 21-ல் கண்டுபிடித்தனர். சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் உள்ள ஊர்ட் மேகத் தொகுப்பிலிருந்து புதிதாக வரும் இந்த வால்நட்சத்திரம் சூரியனை மிகவும் அருகில் அதாவது 12 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடக்க உள்ளது. 

இவ்வளவு நெருக்கமாக இது கடப்பதால் சூரியனை உரசிச் செல்லும் வால்நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. சூரியனை நெருங்கும்சமயத்தில் அதன் தலை, வால் ஆகிய பகுதிகள் பல்லாயிரம் மடங்கு பெரியதாகவும், பிரகாசமாகவும் காணப்படும். சூரியனை மிக நெருங்குவதால் வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் வால்நட்சத்திரம் பாதிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. 

இந்த வால் நட்சத்திரம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் கிலோ கார்பன்-டை-ஆக்ஸடையும், 54.4 மில்லியன் கிலோகிராம் தூசித் துகள்களையும் வெளியிடுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

வால்நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு நீரும், உயிரினங்கள் தோன்ற ஆதார மூலப்பொருள்களும் கிடைத்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுவதால், ஐசான் வால்நட்சத்திரத்தை அதிக ஆர்வத்துடன் ஆய்வு செய்துவருகின்றனர். ஐசான் வால்நட்சத்திரம் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெகுதொலைவில் செல்வதால் பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top