Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -இரண்டாம் உலகம் - ஸ்பெஷல் சினிமா விமர்சனம்!.

இரண்டாம் உலகம் - ஸ்பெஷல் சினிமா விமர்சனம்!.

இன்று உலகத் திரைப்படங்களெல்லாம் நம் கைக்குள் கிடைக்கும் நிலையில், தமிழில் அதே போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது, நாம் செலுத்தவேண்டிய உழைப்பு பல மடங்கு கூடுதலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சாமானிய பார்வையாளன், இதுல ஒண்ணுமே இல்லையே என்றோ, இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையே என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய்விடுவான். 

நம்பாத கதையைப் பற்றி யோசிக்கவிடாமல் படத்தின் திரைக்கதையும், அதன் பிரம்மாண்டமும், அதன் தொழில்நுட்பமும் அவனைக் கட்டிப் போட்டிருக்கிறது இந்த இரண்டாம் உலகம். ”காதல்” உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.அந்த காதலைத்தான் செல்வராகவன் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இந்த இரண்டாம் உலகம் படத்தில் ஆனால் வேறு உலகத்தில். இரண்டாம் உலகம் தமிழ் சினிமாவை ஒரு புதிய ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்வது உறுதி. 

சரி கதைக்கு வருவோம்…. இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு காதல்கள், ஒன்று நாம் வசிக்கும் பூமியில் மற்றொன்று கனவு உலகமான வேறொரு கிரகத்தில், அங்கேயும் மனிதர்கள், மரங்கள், காற்று, நீர் என அனைத்தும் இருக்கிறது ஆனால் ஒன்றைத் தவிர அதுதான் பூக்கள். எப்படியாவது இந்த கிரகத்தில் பூக்களை படைத்துவிட வேண்டும் என என்னும் கடவுளுக்கு தோல்வியே பதிலாக வருகிறது, 

இதற்கு என்ன காரணம் என யோசிக்கும் கடவுள், அதற்கான விடையையும் கண்டுபிடிக்கிறார் அதுதான் காதல். அந்த கனவு உலகை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார் செல்வா. சரி நம்ம பூமிக்கு வருவோம்… 

காதல் 1: மது பாலகிருஷ்ணாவாக ஆர்யா, ரம்யாவாக அனுஷ்கா, டாக்டருக்கு படித்துவிட்டு மருத்துவ சேவை செய்கிறார் அனுஷ்கா, டாக்டருக்கு படிக்காமலே மக்களுக்கு மருத்துவ சேவை செய்கிறார் ஆர்யா, இதனால் ஆர்யா மீது அனுஷ்காவுக்கு காதல் வருகிறது. ஆர்யாவிடம் காதலை சொல்ல வரும் அனுஷ்காவின் நடிப்பு அவ்வளவு அழகு, அனுஷ்காவின் காதலை ஏற்க மறுக்கும் ஆர்யா, பின் அனுஷ்காவை காதலிக்க அவர் பின்னாடியே அலைவதை காமெடி கலந்து அடித்திருக்கிறார் செல்வராகவன். ஆனால் அனுஷ்காவுக்கு ஏற்படும் நிலைமை ஆர்யாவை இரண்டாம் உலகத்துக்கு கொண்டு செல்கிறது. 

காதல் 2 : கனவு உலகமான வேறொரு பூமி ’அட அங்கேயும் தமிழ் தான் பேசுறாங்கப்பா’ இங்கும் ஒரு ஜோடி அனுஷ்கா, ஆர்யா இவர்கள் இருவருக்குள்ளேயும் காதல் இல்லை. ஆனா எப்படி காதலர்களாகிறார்கள் என்பது தான் கதை. ஆண், பெண் இருந்தால் மட்டும் போதாது காதலும் இருக்க வேண்டும் அப்போ தான் ஒரு கிரகம் முழுமையா செழுமையுடன் இருக்கும் என ஒன் லைனை வைத்து இரண்டே முக்கால் மணி நேரம் ஓ(ட்)டியிருக்கிறார் செல்வா. படத்தின் பெரிய ப்ளஸ் அனுஷ்கா மற்றும் இந்த கனவு உலகம் தான். 

அதில் வரும் விஷுவல்ஸ் அத்தனையும் அருமை. ஆர்யா சிங்கத்துடன் சண்டை போடும் காட்சி விஷுவல் பிரியர்களுக்கு நல்ல விருந்துதான். வெள்ளைக்காரனையும் தமிழ் பேச வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. ஆர்யாவின் உழைப்பு அபாரமானது. அனுஷ்கா யாரையாவது அடித்துக்கொண்டே இருக்கிறார். இந்த விஷுவல்ஸ் அத்தனையும் மர்சின் தவரியா மற்றும் Firefly Creative Studios செய்திருக்கிறார்கள். 

இப்படத்தின் பெருமைகள் அனைத்தும் இவர்களையே சேரும். பிரம்மாண்டமான ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் ராம்ஜி படத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அந்த மாதிரி உலகம் நமக்கு கிடைக்காதா என ஏங்குவார்கள். இசையமைப்பாளர்கள் இரண்டு பேர், பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ், பின்னணி இசைக்கு அனிருத். பாடல்களுக்கு முக்கியதுவம் கொடுத்து கேட்க முடியாது ஆனால் பின்னணி இசை பாராட்டுக்குரியது…

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஒரு தமிழனின் புது முயற்சியை ஹாலிவுட் அவதார் ரேஞ்சுக்கு வைத்து கொண்டாடியாக வேண்டும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top