Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி.? (மழைக்கால எச்சரிக்கை)

டெங்கு காய்ச்சல் ..(மழைக்கால எச்சரிக்கை)

உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு சுரம். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு கொள்ளை சுரத்தின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது.

டெங்கு சுரம் எப்படி ஏற்படுகிறது..?

டெங்கு 1, 2, 3, 4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் சுரம் இது. ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5, 6 நாட்களில் சுரம் வருகிறது. இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.

நோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...?

நோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும். டெங்கு காய்ச்சல்.

அறிகுறிகள் என்ன...?

முதல் நிலை ; டெங்கு காய்ச்சல்,கடுமையான ஊன சுரம், கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால் கடும் வலி , தசைவலி, எலும்பு & மூட்டுவலி, கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள்,

இரண்டாம் நிலை ; கடும் சுரம், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி, மூக்கு, குடற்பகுதியில ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம். நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு 12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.

கொசு  உருவாகாமல் தடுக்க

கொசு  உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கிய மானது.சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது.

கொசு கடிக்காமல் பாதுகாக்க..

தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்....!

சித்த மருத்துவம்

பாதிக்கப்பட்ட நோயாளி நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை காலை, மாலை ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கபடுவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது..!

பெருவாரி நோய்கள் பரவும் காலங்களில் நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும், நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்தவும் வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள். 

எளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி! அறியாமை! மனிதன் மகத்தானவன்! மனித உயிர் விலை மதிப்பற்றது! மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க .. வீண் பயமும் பீதியும் எதற்கு..? டெங்கு சுரத்தை முறியடிப்போம்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top