Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரொம்ப சுலபமாக இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி..?

ரொம்ப சுலபமாக இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி..?

ரொம்ப சுலபமாக இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி..? சில தினங்களுக்கு முன்பு எனது நண்பன் இன்டர்வியூக்கு சென்றிருந்தான். இன்டர்வியூ முடித்த பின் அவனிடம் நான் இன்டர்வியூ ரிசல்ட் எப்படி என்று கேட்டேன், நான் செலக்ட் ஆக வில்லை என்று சொன்னான். எனது நண்பன் நன்றாக படித்தவன். விஷயங்களை மிக எளிதில் புரிந்துகொண்டுவிடுவான். 

அவன் சென்ற இன்டர்வியூக்கு முழு தகுதியுடையவன் ஏன் அவன் தேர்வு செய்யப்படவில்லை என்று நானும் யோசித்தேன். பொதுவாக இன்டர்வியூ அறையில் பைலை எடுத்து கொண்டு நடக்கும் போதே வரும் நபரின் முடிவு உத்தேசமாக கணிக்கபட்டுவிடும். 

மேலும் நடை, உடை பாவனைகள் பற்றியும் அங்கே எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதையும் நாம் தற்போதைய சூழலில் இணையம், புத்தகம் மற்றும் நண்பர்களிடம் இருந்தும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதால் எனது நண்பனிடம் இருந்த குறை என்ன என்பதை சற்று விரிவாக இங்கு பேசலாம் என்று நினைக்கிறேன். 

இன்டர்வியூவில் முக்கியமாக கவனிக்கப்படும் விஷயங்களில் ஒன்று கம்யூனிகேஷன் ஸ்கில். எனது நண்பன் ஆங்கிலத்தை நன்றாக பேசவும், எழுதவும் செய்வான் இருந்தாலும் பெரும்பாலும் அமைதியான மனோநிலையில் இருப்பவன். அதிர்ந்தும் பேசாதவன். சமயங்களில் யாரிடமும் முகம் கொடுத்தும் பேசமாட்டான். 

இந்த மாதிரியான நபர்கள் தங்களது நடவடிக்கைகளில் அமைதியை கடைபிடித்தாலும் வேலை என்று வந்துவிட்டால் சும்மா அதிருதுல்ல என்று பட்டையை கிளப்புவார்கள் எனது நண்பனும் அப்படித்தான். நவீன உளவியல் இம் மாதிரியான நபர்களை loner என்று அழைக்கிறது. 

கூச்ச சுபாவமும், கேட்கப்படும் கேள்விக்கு மிக சுருக்கமான பதில் அளிப்பது போன்றவைகள் சில நேரங்களில் கர்வம் கொண்டவர், தனிமையனவர் யாரிடமும் கலந்து பேசி முடிவுகளை எடுக்க தயக்கம் காட்டுவார்கள் என்ற சூழலை ஏற்படுத்திவிடுகிறது. இது இப்படி இருக்க சில நபர்கள் இருக்கின்ற இடத்தை தங்களது பேச்சால் கவர்ந்து விடுவார்கள். 

சில விவாதங்களில் தாங்களாகவே வலியசென்று கருத்துக்களை தெரிவிப்பார்கள் போதுமான தொழில்நுட்ப திறன் இல்லை என்றாலும் இவர்கள் இன்டர்வியூல் தேர்வுசெய்யபட்டுவிடுவார்கள். இவர்களை நவீன உளவியல் sociable person என்று சொல்லுகிறது. பக்கம் சாராமல் பார்த்தால் இன்றைய நிலையில் கார்ப்பரேட் கம்பெனிகள் நாம் இதுவரை விவாதித்த நபர்களில் இரண்டாவது பிரிவு நபர்களான sociable person வகையிலான நபர்களையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். 

அதிகம் பேசுபவன் அறிவாளியாகவும் பேச நேரம் எடுத்து கொள்பவனை அறிவில் குறைந்தவனாகவும் மதிக்கப்படுகிறார்கள். நன்றாக பேசுவது என்பது ஒரு வகை ஆளுமைத்திறன் மட்டுமே. நன்றாக சரளமாக பேசுபவர்கள் எதிராளியை தங்களது பேச்சுதிறனால் கவர்ந்துவிடுவார்கள். வேலையில் சேர்ந்த பின் சில வேலைகளை செய்ய முடியாமல் இருக்கும் போது உயர்அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கும் பேசியே சமாளிக்கவும் செய்கிறார்கள். 

இன்று பல ஆய்வுகள் sociable person களை விட loner வகை நபர்கள் நல்ல நம்பத்தகுந்த நபர்களாக உருவாகிறார்கள் என்று சொல்கிறது. நாமும் மக்களுடன் இணைந்து திறமையான வேலைசெய்யும் loner களையும் தனியே சாதிக்கும் சில sociable personகளையும் பார்க்கிறோம். தொழில் தேவைகளுக்காக அவர்களால் தங்களது இயல்பை மாற்றிக்கொள்ள முடியும் என்பது இதில் நமக்கு தெரியவருகிறது. 

இதற்கு மிக முக்கியமான காரணம் முதல் அபிப்பிராயம் மட்டுமே. நாமும் இனி வரும் காலங்களில் loner களிடம் பேசினோமேயானால் அவர்களிடம் உள்ள நகைச்சுவை, சமயங்களில் வெளிப்படும் அவர்களது வார்த்தைகள் அதிகம் வீரியம் கொண்டவையாக இருப்பதையும் அறியலாம். மேலும் பேசாத நபர்களை நோயாளியாக பார்க்கும் மனோபாவமும் தற்போது அதிகரித்து வருகிறது. 

முக்கியமான கலந்துரையாடல்களில் இரண்டு மூன்று நபர்கள் மட்டுமே தங்களது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். இதனால் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கூட்டங்கள் பயனற்று போகிறது. எங்கே நமது கருத்துக்கள் அதிகம் விமர்சிக்கப்படுமோ அல்லது தவறான கருத்துக்களை அல்லது விவாதத்திற்கு ஒத்து வராத கருத்தாக சொல்லிவிடுவோமோ என்ற எண்ணமும் இதற்கு காரணமாகிவிடுகிறது. 

சரி இந்த மாதிரியான சூழலை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம் இன்டர்வியூ செய்யும் நபர்கள் தொடர்ச்சியான கேள்விகளை loner களிடம் கேட்காமல் அவர்களின் மவுனத்தை அனுமதித்து அவர்களிடம் இருந்து விரிவான பதிலை பெற வேண்டிய கேள்விகளை கேட்கவேண்டும். மேலும் அவர்களது உடல் அசைவுகளை வெளிப்படுத்தி செய்யும் செயல்களை செய்ய வைக்கும் கேள்விகளை கேட்க வேண்டும். 

மிக முக்கியமாக இன்டர்வியூக்கு வரும் இந்த இரண்டு பிரிவு நபர்களின் பதில்களை கூர்ந்து கவனித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என்பவை இதற்கான தீர்வாக இருக்கும். உலகில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தவர்களின் இயல்பு அதிகம் பேசாமல் இருப்பதே ஆகும் ஆகவே அவர்களின் உள்நோக்கிய பயண அனுபவங்களை வெற்றிகரமாக மாற்றுவது நம்மிடம் தான் இருக்கிறது.....!

இக்கட்டுரையை daytamil லுக்கு அனுப்பியவர்; V.Venkataramanan 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top