Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

சுற்றுலா ஸ்பெஷல்

குழந்தை முக சிரிப்புடன் பூத்துக்குலுங்கும் மலர்களை கொடுத்து மலைகளின் ராணியான ஊட்டியை சுற்றிப் பார்க்க உங்களை இன்முகத்தோடு வரவேற்கிறோம். தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் நீலகிரி மலையில் அமைந்துள்ளது ஊட்டி. இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும். 

கடல் மட்டத்திலிருந்து 7347 அடி(2239 மீ) உயரத்தில் உள்ளதால், என்றென்றும் ஜில்லென காற்றும், பசுமையும் நிறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருந்தாலும் சுட்டெரிக்கும் சூரியனின் கோடைகால கொடுமையில் புலம்பும் மக்களை புன்முறுவலோடு வரவேற்பது இந்த ராணி என்றே சொல்லலாம். 

ஊட்டி தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்காவில் மொத்தத்தில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 3000 ரக தாவர இனங்கள் உள்ளன. 144 ரக பரணிச் செடிகள், 350 வகை ரோஜா, 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிச்செடிகள், டைனோசர் கால ஜிங்கோபைலபா மரம் என ஏராளமான மர வகைகள் உள்ளன. உங்களது பாதங்களை இந்த பூங்காக்களில் உள்ள புல் தரையின் மீது பதித்தாலே, பஞ்சு மீது நடப்பதுபோன்ற உணர்வை பெறுவீர்கள். 

படகு இல்லம்

ஊட்டி சுற்றுலா என்று வந்து விட்டாலே படகு பயணம் உல்லாசம் அளிக்கும் ஒன்றாகும். சிறுவர், சிறுமியரை கவர ஏரிக்கரையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும் சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. 

ஊட்டிக்கு வந்துவிட்டு படகுப்பயணமின்றி ஊர் திரும்பினால், சுற்றுலா அனுபவம் முற்றுப்பெறாது என்பதை பயணித்துப்பார்த்தவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இதனால் இங்கு கூட்டம் எப்போதும் அலைமோதிய வண்ணம் இருக்கும். 

தொட்டபெட்டா சிகரம்

தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் என்ற பெருமையை பெற்ற தொட்டபெட்டா சிகரம், பார்வையாளர்களுக்கு பரவசம் தரக்கூடிய காட்சி முனை. இங்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலம், ஊட்டி, குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை கண்டு வியக்கலாம். 

பைக்காரா ஏரி

பைக்காரா அணையில் திறந்து விடப்படும் நீர் இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது அருவியை போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீரை கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் செல்லும், அதிவிரைவு படகு இந்த ஏரியில் மட்டுமே உள்ளது என்பது சுற்றுலா பயணிகளுக்கு குஷியான தகவல். 

சிம்ஸ் பூங்கா

அரிய வகை மரங்களின் புகலிடமாக இப்பூங்கா உள்ளது. கற்பூர மரங்களில் மட்டும் 27 வகைகள் உள்ளன. 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை மரங்கள் என காணக் கிடைக்காத மிகப்பழமையான மரங்கள் இப்பூங்காவில் உள்ளன. 

இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர் சிம்ஸ்பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ் ராக், அங்கிருந்த 2 கி.மீ., தூரத்தில் 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள் பார்வையாளர்களுக்கு திரில் அனுபவத்தை தருகின்றன. இவ்வாறான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டு அழகிய கிரீடத்துடன் ஜொலிக்கும் இந்த ராணியை ஒருமுறையாவது பார்த்து விட்டு வாருங்களேன்...!

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

தமிழ்நாட்டில் இந்த குட்டி காஷ்மீரில் நீங்க பார்க்க வேண்டிய இடங்கள் எது தெரியுமா..?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் கருத்து என்ன?

Back to Top